
ஸ்போர்ட்ஸ் டுடே செய்தி
இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் மீண்டும் செப்.19 அல்லது செப்டம்பர் 20ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் என்றும், அக்டோபர் 10ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்றும் ஸ்போர்ட்ஸ் டுடே செய்தி வெளியிட்டுள்ளது. இந்த 31 போட்டிகளில், 10 போட்டிகள் double headers-ஆக, அதாவது ஒரே நாளில் இரண்டு போட்டிகளாக நடத்தப்படுமாம். அதேபோல் 7 single headers-ஆகவும், 4 பிளே-ஆஃப் போட்டிகள் என 31 போட்டிகளும் 21 நாளில் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் தகவல்
இதனை ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும், தலைமை செயல் அதிகாரிகளும் உறுதிப்படுத்தி உள்ளதாகவும், பிசிசிஐ அதிகாரிகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தெரிவித்ததாகவும் விளையாட்டு பத்திரிகையாளர் போரியா மஜூம்தார் ஸ்போர்ட்ஸ் டுடே யூடியூப் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். இதனால், ஐபிஎல் ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டிங்கில் உள்ளது.

திடீர் முடிவு
இந்த சூழலில், செப்டம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறவிருந்த டி20 தொடரை பிசிசிஐ ரத்து செய்துள்ளதாக தெரிகிறது. உலகக் கோப்பை டி20 தொடருக்கு தயாராகும் விதமாக தென்.ஆ., தொடர் முடிவு செய்யப்பட்டது என்றாலும், இப்போது ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதால், அதை விட, டி20 உலகக் கோப்பைக்கு கடுமையான பயிற்சி களம் இருக்க முடியாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதிக போட்டிகள்
அதுமட்டுமின்றி, அடுத்த வருடத்தின் தொடக்கத்தில், தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியா சுற்றுப்பயணம் செய்யும் போது, ரத்து செய்யப்பட்ட இந்த போட்டிகளுக்கு காம்ப்ரமைஸ் செய்யும் விதமாக, கூடுதலாக இந்திய அணி போட்டிகளில் விளையாடும் என்று பிசிசிஐ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications