தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் - அதிக ரன்கள் அடித்த 5 இந்திய வீரர்கள்
டர்பன் : இந்தியா தென்னாப்பிரிக்கா அணைக்கிடையிலான முதல் டி20 போட்டி வரும் பத்தாம் தேதி நாளை டர்பனில் நடைபெறுகிறது. இந்திய அணி தங்களுடைய முதல் சர்வதேச t20 கிரிக்கெட் போட்டியை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தான் விளையாடுகிறது.
இந்த நிலையில் இந்த 17 ஆண்டு காலத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக t20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 இந்தியர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்.

இவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 13 போட்டிகளில் விளையாடி 221 ரன்கள் சேர்த்து இருக்கிறார். இதில் சராசரி 31 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 144 ஆகும். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியா விளையாடிய முதல் டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்று இருந்தார் . இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் ஷிகர் தவான். தவான் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 7 போட்டிகளில் விளையாடி 203 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதில் சராசரி 33 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 141 என்ற அளவில் இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு ஜோஹனஸ்பர்க்கில் நடைபெற்ற டி20 போட்டியில் ஷிகர் தவான் 39 பந்துகளில் 72 ரன்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. கோலி இதுவரை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 318 ரன்கள் அடித்திருக்கிறார்.
சராசரியாக 35 என்ற அளவில் அடித்திருக்கிறார். 2014 டி20 உலக கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் கோலி 44 பந்துகளில் 72 ரன்கள் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடித்தது இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாது. இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா. இவர் 12 போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடி 339 ரன்கள் குவித்திருக்கிறார். 2010 டி20 உலக கோப்பையில் சுரேஷ் ரெய்னா இந்தியாவின் முதல் டி20 சதத்தை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தான் அடித்திருந்தார். அவர் 60 பந்துகளில் 101 சேர்த்தார்.
இந்தப் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஆகும். இவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 17 போட்டிகளில் விளையாடி 420 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் ஒரு சதம், இரண்டு அரை சதம் அடங்கும். 2015 ஆம் ஆண்டு தர்மசாலாவில் 66 பந்துகளில் 106 ரன்கள் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ரோஹித் அடித்து இருந்தார். இந்தப் பட்டியலில் இடம்பெற்ற ஐந்து வீரர்களுமே தற்போது நடைபெறும் டி20 தொடரில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Saturday, December 9, 2023, 17:33 [IST]
Other articles published on Dec 9, 2023


Click it and Unblock the Notifications