Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென்னாப்பிரிக்க தொடரில் சொதப்பிய டாப் 5 இந்திய வீரர்கள்.. உங்களை எல்லாம் அழைச்சிட்டு வந்ததுக்கு...

கேப் டவுன் : தென்னாபிரிக்காவுக்கு எதிரான டி20 ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர் தற்போது முடிவடைந்து இருக்கிறது. இந்த சுற்றுப்பயணம் இந்தியாவுக்கு ஒரு பிளாக்பஸ்டர் தொடராகவே அமைந்திருக்கிறது. டி20 தொடர் சமன்,ஒருநாள் தொடர் வெற்றி, டெஸ்ட் தொடர் சமன் கேப் டவுன் டெஸ்டில் முதல் வெற்றி என்று பல வரலாற்று சம்பவங்களை இந்தியா செய்திருக்கிறது.

இந்த தொடரில் பல இளம் வீரர்கள் மற்றும் சீனியர்கள் தங்களோடு திறமையை நிரூபித்து இருக்கிறார்கள். ஆனால் இந்தத் தொடரில் வாய்ப்பு கிடைத்தும் அதனை வீணடித்த டாப் 5 வீரர்கள் குறித்து தான் நாம் தற்போது காண இருக்கிறோம். இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் சர்துல் தாக்கூர் தான்.

ind vs sa

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு ஆல்ரவுண்டர் தேவை என்பதால், இவரை டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் எடுக்காமல் டெஸ்ட் போட்டிக்காக இந்தியா பாதுகாத்து வைத்திருந்தது. ஆனால் அது அனைத்தும் வீண் என்று ஒரே போட்டியில் அவர் காண்பித்து விட்டார்.ரசிகர்கள் சர்துல் தாக்கூரை, லார்ட் தாக்கூர் என்றுதான் அழைப்பார்கள்.

ஆனால் இவர் தாம் விளையாடிய ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் 19 ஓவர்கள் வீசி 101 ரன்கள் விட்டுக் கொடுத்து ஏமாற்றத்தை கொடுத்தார். இதேபோன்று பேட்டிங்கில் 24 மற்றும் 2 ரன்கள் தான் எடுத்தார். இதன் காரணமாக இவர் இரண்டாவது டெஸ்டில் நீக்கப்பட்டார்.இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் சி எஸ் கே அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் தான். இந்தத் தொடரில் டி20, ஒருநாள் ,டெஸ்ட் என மூன்று இந்திய அணியிலும் ஸ்கூவாடில் ருதுராஜ் இடம் பெற்று இருந்தார்.

ruturaj

ஆனால் அவருக்கு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இரண்டு ஆட்டங்களில் மட்டும் தான் வாய்ப்பு கிடைத்தது. அந்த இரண்டு வாய்ப்பையும் அவர் வீணடித்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளில் அவர் வெறும் 5 மற்றும் 4 ரன்கள் தான் அடித்தார். டி20 போட்டி போது காய்ச்சல் காரணமாக அவர் விளையாடவில்லை. மோசமாக விளையாடியதால் டெஸ்ட் போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் பிரசித் கிருஷ்ணா. நல்ல உயரமாக இருப்பதால் இவர் தென்னாபிரிக்க ஆடுகளங்களில் சிறப்பாக செயல்படுவார் என நம்பி தேர்வு குழு இவருக்கு வாய்ப்பு அளித்தது. ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் 93 ரன்களை விட்டுக் கொடுத்து இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.எனினும் இளம் வீரர் என்பதால் அவருக்கு இரண்டாவது டெஸ்டிலும் வாய்ப்பு கிடைத்தது.

jaiswal

அதில் இவர் வீசிய ஒரு ஓவரில் எய்டன் மார்க்கரம் 6,4 என அடித்து நொறுக்கி விட்டார். இந்த இரண்டு டெஸ்ட் போட்டி முழுவதும் விளையாடிய பிரசித் கிருஷ்ணா இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி சொதப்பினார். இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் ஜெய்ஸ்வால். டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் இடம் பெற்றிருந்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஜெய்ஸ்வால் 60 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனால் அவர் இரண்டாவது டி20 போட்டியில் டக் அவுட் ஆனார்.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்படுவார் என ரசிகர்கள் மிகவும் நம்பினர். ஆனால் அவர் ஒரு முறை கூட 30 ரன்கள் தொட வில்லை. முதல் டெஸ்டில் 17 மற்றும் 5 ரன்கள் என அடித்த ஜெய்ஸ்வால் இரண்டாவது டெஸ்டில் டக் அவுட் மற்றும் 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் ஸ்ரேயாஸ் ஐயர். காரணத்தினால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு டி20 அணியில் வாய்ப்பை கிடைக்கவில்லை. எனினும் முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி 52 ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில் டெஸ்ட் தொடரில் ஸ்ரேயாஸ் முக்கியத்துவம் வாய்ந்த வீரர் என்பதால் அவரை அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஓய்வு அளித்து டெஸ்ட் தொடருக்கு தயாராக அழைத்தார்கள். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தமக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை அவர் வீணடித்தார். முதல் டெஸ்டில் 31 மற்றும் 6 ரன்கள் எடுத்திருந்த ஸ்ரேயாஸ் இரண்டாவது டெஸ்டில் டக் அவுட் ஆனார். கடைசி இன்னிங்ஸில் அவர் ஒரு பவுண்டரி அடித்திருந்த நிலையில் இந்தியா வெற்றி பெற்றது.

Story first published: Friday, January 5, 2024, 10:00 [IST]
Other articles published on Jan 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+