Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெறும் 3 மணி நேர முகாம்.. பயிற்சியாளர்களை வியக்கவைத்த இளம் படை.. அப்படி என்னதான் செய்தனர்!

டெல்லி: இந்திய இளம் படை காட்டிய ஆட்டத்தில் பயிற்சியாளர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூன் 9ம் தேதி தொடங்குகிறது.

முதல் டி20 போட்டி டெல்லியில் உள்ள ஃபெரோசா கோட்லா மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

இந்திய அணி

இந்திய அணி

இந்த தொடருக்கான இந்திய அணியில் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட பலரும் இல்லை. கே.எல்.ராகுல் தலைமையிலான இளம் படையே களமிறங்குகிறது. ஐபிஎல்-ல் விளையாடி வந்த வீரர்கள், சர்வதேச போட்டியை சமாளிக்க நேற்று டெல்லியில் முதல் நாள் பயிற்சி முகாமில் கலந்துக்கொண்டனர்.

ஆச்சரியம் தந்த வீரர்கள்

ஆச்சரியம் தந்த வீரர்கள்

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு வீரர்களும் தங்களது பலவீனத்தை சரியாக கண்டறிந்து சரிசெய்துள்ளனர். கேப்டன் கே.எல்.ராகுல் ஸ்பின்னர்களிடம் திணறி வந்தார். எனவே நேற்று ரவி பிஷ்னாய், குல்தீப் யாதவ், அக்‌ஷர் பட்டேல் போன்ற வீரர்களை பவுலிங் போடவிட்டு, அதனை லாவகமாக எதிர்கொண்டார்.

தினேஷ் கார்த்திக் புது ஷாட்

தினேஷ் கார்த்திக் புது ஷாட்

ஐபிஎல்-ல் கலக்கிய தினேஷ் கார்த்திக், நேற்று ஸ்கூப் ஷாட்களை ஆடுவதற்கு பயிற்சி எடுத்தார். தினேஷ் கார்த்திக் ஐபிஎல்-ல் பெரும்பாலும் பின் திசையில் ஷாட்களை அடிக்க முயலவில்லை. ஆனால் ஃபினிஷர் பணி என்பதால், ஸ்கூப் ஷாட்களையும் ஆடுவதற்காக நீண்ட நேரமாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து ஸ்பெஷல் ஷாட்களை எதிர்பார்க்கலாம்.

பவுலர்களின் முயற்சி

பவுலர்களின் முயற்சி

பவுலிங்கை பொறுத்தவரையில் அர்ஷ்தீப் சிங், யார்க்கர் வீசுவதில் சரியான லெந்த்-ஐ பிடிக்க முடியாமல் இருந்தார். எனவே நேற்று அவர், பாட்டில் மற்றும் கயிறுகளை வைத்து, அட்டகாசமான யார்க்கர்களை வீசி பயிற்சி எடுத்தார். இதே போன்று உம்ரான் மாலிக்கும் தொடர்ச்சியாக 150+கிமீ வேகத்தில் பவுலிங் வீசி வந்தார். தென்னாப்பிரிக்க அணியில் 150+ வேகத்தில் பந்துவீச்சை சமாளிப்பது கடினம். எனவே அதனை தனது பலமாக உம்ரான் எடுத்துக்கொண்டுள்ளார். இதனை பார்த்த பயிற்சியாளர்கள் ஆச்சரியமடைந்தனர்.

Story first published: Tuesday, June 7, 2022, 17:07 [IST]
Other articles published on Jun 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+