Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL - கம்பீரை ஏமாற்றிய சுப்மன் கில்.. தொடர்ந்து சொதப்பி வரும் வீரருக்கு துணை கேப்டன் பதவியா?

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் களமிறங்கி ரசிகர்களை வெறுப்பேற்றும் வகையில் செயல்பட்டார். இந்திய அணியின் அடுத்த கேப்டனாக கில் வளர்க்கப்பட்டு வருகிறார். இதற்கான காய்களை தற்போது பிசிசிஐ நகர்த்தி வருகிறது.

ஏற்கனவே டி20 மற்றும் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டனாக கில் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் கில்லுக்கு போட்டியாக ருதுராஜ் வந்து விடக்கூடாது என்பதால் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

ind vs sl shubman gill Virat kohli Rohit sharma


இப்படி கில் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கும் கம்பீர் இவரை அடுத்த கோலியாக உருவெடுத்து விடலாம் என்று காய் நகர்த்தி வருகிறார். ஆனால் கில் டி20 போட்டியிடும் பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 34 ரன்களும், மூன்றாவது டி20 போட்டியில் 39 ரன்களும் எடுத்திருந்தார்.

கில்லின் ஸ்டிரைக் ரேட் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ள நிலையில் தற்போது இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் அவர் கடுமையாக தடுமாறினார். ஒரு புறம் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி டி20 கிரிக்கெட் விளையாடுவது போல் ரன்கனை சேர்த்து வந்தார். ஆனால் கில்,டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது போல் பந்துகளை வீணடித்து திணறினார்.

35 பந்துகளை எதிர் கொண்ட கில் வெறும் 16 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதில் இரண்டு பவுண்டரிகள் அடங்கும். ரோஹித் சர்மா 123 என்ற அளவில் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்த நிலையில் சுப்மன் கில் வெறும் 45 தான் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார்.இதனால் இந்தியாவின் ரன் அடிக்கும் வேகம் குறைந்தது வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்க்க வேண்டும் என கம்பீர் அறிவுறுத்திய நிலையில் கில் தடுமாறினார்.

கில்லை வைத்து பெரிய கோட்டை கட்டலாம் என நினைத்த கம்பீருக்கு கில்லின் பேட்டிங் ஃபார்ம் ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. இதனால் கில்லின் இந்த பேட்டிங்கை சுட்டிக்காட்டி உள்ள ருதுராஜ் ரசிகர்கள், இதற்கு சரியான தேர்வாக ருதுராஜ் தான் இருந்திருப்பார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Friday, August 2, 2024, 20:27 [IST]
Other articles published on Aug 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+