தப்பு பண்ணிட்டீயே குருநாதா..!!.. இந்திய அணிக்கு லட்டு வாய்ப்பை தந்த இலங்கை.. லக்னோவில் சுவாரஸ்யம்!!
லக்னோ: இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி நடக்கும் லக்னோ மைதானத்தில் வெற்றி பெற வேண்டுமென்றால் சிறப்பு விஷயம் ஒன்று உள்ளது.
இரு அணிகளும் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று முதல் லக்னோ மைதானத்தில் தொடங்கியுள்ளது.
கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின்பு இந்தியா வந்துள்ள இலங்கை அணி வெற்றியுடன் திரும்பும் முணைப்புடன் உள்ளது.

இலங்கையின் சொதப்பல்
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. வழக்கமாக டாஸ் வெல்லும் அணி, வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கக்கூடிய முடிவை தான் எடுக்கும். அந்தவகையில் இந்திய அணிக்கு இன்று பின்னடைவு என்று தான் கருதுவார்கள். ஆனால் உண்மையில் இந்திய அணிக்கு பெரிய லட்டை தானாக முன்வந்து கொடுத்துள்ளது இலங்கை அணி.

காரணம் என்ன
போட்டி நடைபெறும் லக்னோ மைதானத்தின் ரெக்கார்டையும் பார்க்க வேண்டியுள்ளது. இந்த போட்டியில் சுவாரஸ்யம் என்னவென்றால் இதுவரை 4 டி20 போட்டிகள் மட்டுமே இங்கு நடைபெற்றுள்ளன. ஆனால் இந்த 4 போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி கண்டுள்ளது. இது ஒரு நல்ல பேட்டிங் டிராக்காகும்.

இந்திய அணி ரெக்கார்ட்
இந்திய அணி இங்கு இதுவரை ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்து 195/2 என்ற ஸ்கோரை குவித்தது. இதுதான் இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் ஆகும். எனவே இங்கு டாஸில் வெற்றி பெற்றால் பேட்டிங்கை தேர்வு செய்வது தான் சரியான முடிவாகும்.

வீரர்களின் முடிவு
தொடக்கத்திலேயே இந்திய அணியின் பக்கம் அதிர்ஷ்டம் தான் எனக்கூற வேண்டும். இதுமட்டுமல்லாமல் இந்திய அணியில் பல இளம் வீரர்களும் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குவதால் இன்று வாணவேடிக்கை கண்டிப்பாக இருக்கிறது என்றே கூறலாம்.


Click it and Unblock the Notifications