Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

5 முக்கிய வீரர்கள் வெளியேற்றம்.. 2வது டி20 போடிக்கான இந்திய ப்ளேயிங் 11.. ரோகித் இறுக்கமான முடிவு!

தர்மசாலா: இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20 போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11ல் இன்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி ஏற்கனவே ஒரு வெற்றியுடன் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் தொடரை கைப்பற்றுவதற்கான 2வது போட்டி இன்று இரவு தர்மசாலாவில் நடைபெறவுள்ளது.

2வது போட்டி

2வது போட்டி

இந்த போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் இந்திய அணி தொடர்ச்சியாக 3வது டி20 தொடரை சொந்த மண்ணில் கைப்பற்றிவிடும். மேலும் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக பெறும் 11வது டி20 போட்டியாக அமையும். எனவே இந்த சாதனைகளை படைப்பதற்காக ப்ளேயிங் 11ல் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.

ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

இந்த தொடருக்கான இந்திய அணியில் பல இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். எனவே 2வது போட்டியில் அவர்களுக்கான வாய்ப்புகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதாவது குல்தீப் யாதவ், ஆவேஷ் கான், முகமது சிராஜ், ரவி பிஷ்னாய், மயங்க் அகர்வால் ஆகிய நட்சத்திர வீரர்கள் தான் அது. இதில் பேட்டிங்கில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்த முடியாது என்றாலும், பவுலிங்கில் சிராஜ், குல்தீப் போன்றோருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

ரோகித் முடிவு

ரோகித் முடிவு

இந்நிலையில் கேப்டன் ரோகித் சர்மா அதே ப்ளேயிங் 11ஐ களமிறக்குகிறார். அதாவது ஓப்பனிங்கில் இஷான் கிஷண் - ரோகித் சர்மா, மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் உள்ளனர். இதில் ஹூடா மற்றும் வெங்கடேஷ் ஐயர் பவுலிங்கிலும் பயன்படுகின்றனர்.

ஜடேஜா ஃபார்ம்

ஜடேஜா ஃபார்ம்

கடந்த போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் யுவேந்திர சாஹல் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டிருந்தனர். எனவே அவர்களே இந்த போட்டியிலும் ஆடுகின்றனர். குல்தீப் மீண்டும் சாஹலுடன் சேருவாரா என்பது காத்திருப்பாகவே உள்ளது.

பவுலிங் படை

பவுலிங் படை

வேகப்பந்துவீச்சில் வழக்கம் போல சீனியர் வீரர்கள் புவனேஷ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் உள்ளனர். அவர்களுடன் கடந்த போட்டியில் பவுலிங் வீசிய ஹர்ஷல் பட்டேல் டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டார். எனவே அவரை மாற்ற விரும்பவில்லை எனத்தெரிகிறது.

Recommended Video

IND vs SL : Rohit Sharma opens up about new role for Ravindra Jadeja | Oneindia Tamil
ப்ளேயிங் 11 கணிப்பு

ப்ளேயிங் 11 கணிப்பு

ரோகித் சர்மா, இஷான் கிஷண், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, வெங்கடேஷ் ஐயர், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், பும்ரா, ஹர்ஷல் பட்டேல், யுவேந்திர சாஹல்

Story first published: Saturday, February 26, 2022, 13:31 [IST]
Other articles published on Feb 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+