அனைவருக்கும் வாய்ப்பு... அட்டகாசமாக ரெடியான இந்திய ப்ளேயிங் 11.. முதல் டி20ல் சரவெடி!!
லக்னோ: இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் வாய்ப்புகாக காத்திருந்த அனைத்து வீரர்களுக்கும் இடம் கிடைத்துள்ளது.
இந்திய - இலங்கை அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்கள் நடைபெறவுள்ளன.
முதல் டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு லக்னோவில் நடைபெறவிருக்கிறது. இதற்காக வீரர்கள் தேர்வு தான் தற்போது நடைபெற்று வருகிறது.

முதல் டி20
அதன்படி விராட் கோலி, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், தீபக் சஹார் என 5 முக்கிய வீரர்கள் இந்த டி20 தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர். எனவே இவர்களுக்கு மாற்றாக வீரர்களை கொண்டு வந்து அட்டகாசமான ப்ளேயிங் 11-ஐ உருவாக்கியுள்ளார் ரோகித் சர்மா.

ஓப்பனிங்
அதன்படி ஓப்பனிங்கில் இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட்டிற்கு வாய்ப்பு கிடைக்கவுள்ளது. இதே போல இஷான் கிஷானும் களமிறங்குகிறார். அதாவது வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3வது டி20ஐ போலவே இதிலும் இஷான் கிஷன் மற்றும் ருதுராஜ் ஓப்பனிங் இறங்க, கேப்டன் ரோகித் சர்மா முதல் விக்கெட்டிற்கு களமிறங்கவுள்ளார்.

புது விக்கெட் கீப்பர்
4வது வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்குகிறார். விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இல்லாத காரணத்தால், அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை அணிக்குள் கொண்டு வரவுள்ளனர். இது அவருக்கான சிறந்த வாய்ப்பாகும். இவர்களை தொடர் வெங்கடேஷ் ஐயர் லோயர் ஆர்டரில் இருக்கிறார்.

ஜடேஜாவின் கம்பேக்
சுழற்பந்துவீச்சை பொறுத்தவரையில் சீனியர் வீரரான ரவீந்திர ஜடேஜா மீண்டும் அணிக்குள் கம்பேக் கொடுக்கவுள்ளார். அவருடன் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கலக்கிய இளம் வீரர் ரவி பிஷ்னாய் சேரவிருக்கிறார். இவர்களின் காம்போவை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

வேகப்பந்துவீச்சாளர்கள்
வேகப்பந்துவீச்சில் அனுபவ வீரர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் அணிக்குள் வருகிறார். அவருக்கு உறுதுணையாக புவனேஷ்வர் குமார் இருக்கிறார். இவர்கள் தவிர்த்து இளம் வீரர்கள் ஹர்ஷல் பட்டேல் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் ஓவர் வீசவுள்ளனர் எனத்தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

இந்திய அணி ப்ளேயிங் 11
இஷான் கிஷண், ருதுராஜ் கெயிக்வாட், ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வெங்கடேஷ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ரவி பிஷ்னாய், ஹர்ஷல் பட்டேல், பும்ரா, புவனேஷ்வர் குமார்.


Click it and Unblock the Notifications