Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி பற்ற வைத்த நெருப்பு.. ரிஸ்க் எடுக்க விரும்பும் ரோகித் சர்மா.. அதிருப்தியில் சீனியர் வீரர்கள்!

தர்மசாலா: இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ரோகித் சர்மாவின் செயல்பாடு ஒருதலைபட்சமாக இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி இன்று தர்மசாலாவில் நடைபெறவுள்ளது.

இந்திய அணி இந்த தொடரில் ஏற்கனவே 1 - 0 என முன்னிலை வகிக்கும் நிலையில் இன்று தொடரை கைப்பற்றலாம்.

 ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

இந்த போட்டிக்காக இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் பெரிய மாற்றங்கள் எதுவுமே செய்யப்படாது எனத் தெரிகிறது. முதல் டி20ல் இருந்த அதே அணி மீண்டும் விளையாடலாம். ஆனால் அணியில் வாய்ப்பு கிடைத்த ஒரு வீரரே ரோகித் சர்மா மீது கோபத்துடன் உள்ளார். அவர் வேறு யாரும் இல்லை சஞ்சு சாம்சன் தான்.

 டாப் ஆர்டரில் ஜடேஜா

டாப் ஆர்டரில் ஜடேஜா

நீண்ட நாட்களுக்கு பின் இந்திய அணிக்கு திரும்பிய சஞ்சு சாம்சன் கடந்த முதல் போட்டியில் மிடில் ஆர்டரில் விளையாட ஆர்வமாக இருந்தார். அதற்கேற்றார் போல வாய்ப்பும் அமைந்தது. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் லோயர் ஆர்டரில் இருந்த ஜடேஜாவை 4வது வீரராக களமிறக்கினார். இதனால் கடைசி வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஜடேஜாவை இனி அடிக்கடி டாப் ஆர்டரில் பார்ப்பீர்கள் என்று ரோகித்தே கூறியிருந்தார்.

தோனி ஃபார்முலா

தோனி ஃபார்முலா

ஜடேஜாவை முதன் முதலில் டாப் ஆர்டரில் களமிறக்கி பரிசோதித்து பார்த்தவர் தோனி தான். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்காக டார் ஆர்டரில் அதிரடியாக ஆடினார். எனவே தோனியை போன்றே ஜடேஜாவை பயன்படுத்தி இந்திய அணியின் பேட்டிங்கை பலப்படுத்த ரோகித் நினைக்கிறார். ஆனால் அது ஆபத்தான ஒன்று.

காரணம் என்ன

காரணம் என்ன

சஞ்சு சாம்சன் ஓப்பனிங் அல்லது முதல் விக்கெட்டிற்கு ஆடக்கூடிய வீரர். அவருக்கு 2வது விக்கெட்டிற்காவது வாய்ப்புக்கிடைத்தால் தான் திறமையை நிரூபிக்க முடியும். இதே போன்று தான் சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர் உள்ளிட்டோரும். ஆனால் தேவையின்றி ஜடேஜாவை மேல் இடத்திற்கு கொண்டு வந்தால், முழு நேர பேட்ஸ்மேன்கள் வாய்ப்பே கிடைக்காமல் தான் இருக்க வேண்டும்.

Recommended Video

IND vs SL : Rohit Sharma will sacrifice these two players | Oneindia Tamil
முன்னாள் வீரர்கள் அறிவுரை

முன்னாள் வீரர்கள் அறிவுரை

டி20 உலகக்கோப்பை தொடருக்குள் இளம் வீரர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால் தான் சிறந்த அணி உருவாகும். எனவே அனுபவ வீரர்களை விடுத்து, இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்து வளர்த்துவிடுங்கள் என முன்னாள் வீரர்கள் அறிவுரை கூறியுள்ளனர். இதனை ரோகித் ஏற்பாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Saturday, February 26, 2022, 17:26 [IST]
Other articles published on Feb 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+