Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா.. ரொம்ப பேசுறீங்க”.. ஜடேஜாவை சீண்டிய கம்பீர்.. கொந்தளித்த ரசிகர்கள்!

மொஹாலி: ஜடேஜா செய்தது பெரிய விஷயம் எதுவும் கிடையாது என்பது போல முன்னாள் வீரர் கம்பீர் கூறியுள்ளார்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கெத்து காட்டிய ஜடேஜா

கெத்து காட்டிய ஜடேஜா

இந்திய அணியின் இந்த அபார வெற்றிக்கு ஜடேஜா தான் முக்கிய காரணம். 7வது வீரராக களமிறங்கிய ஜடேஜா அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் சதம் அடித்து அசத்தினார். இலங்கை வீரர்கள் அவரை அவுட்டாக்க முடியாமல் திணறி வந்தனர். எனினும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 175 ரன்களை குவித்தார்.

ஏமாந்த ஜடேஜா

ஏமாந்த ஜடேஜா

பந்துவீச்சை பொறுத்தவரையிலும் ஜடேஜா சிறப்பாக செயல்பட்டு அசத்தினார். முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்கள், 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்கள் என மொத்தமாக 9 விக்கெட்களை கைப்பற்றினார். வரலாற்றில் இப்படி ஒரு சாதனையை யாரும் படைத்ததில்லை என்ற பெருமையும் அவருக்கு சேர்ந்தது.

கவுதம் கம்பீர் விமர்சனம்

கவுதம் கம்பீர் விமர்சனம்

இந்நிலையில் இதுகுறித்து கம்பீர் பேசியுள்ளார், ஜடேஜா இந்தியாவில் இந்த ஸ்கோரை அடித்ததற்கு பதில், வெளிநாட்டில் இதேபோல் ரன்களை குவித்திருந்தால் அதிலிருந்து நிச்சயம் நல்ல மனவுறுதியைப் பெற்றிருப்பார். அவர் 100 ரன்களை கடந்த பிறகு தனஞ்செயா டி சில்வா, அசலங்கா, எல்புல்டேனியா போன்றவர்கள் மட்டும்தான் அவருக்கு பந்துவீசினார்கள். இவர்கள் ஒருமுறைகூட ஜடேஜாவை அச்சுறுத்தவில்லை.

Recommended Video

IPL 2022 Schedule வெளியானது.. CSK-க்கு காத்திருக்கும் பலப்பரீட்சை
மாற்று வீரர்

மாற்று வீரர்

இந்தியாவில் சதமடிப்பதை விட, அயல்நாட்டில் 40 - 50 ரன்கள் அடித்திருந்தாலும், அதுதான் மிகச்சிறந்த ஆட்டமாக இருந்திருக்கும். ஜடேஜாவின் இந்த இன்னிங்ஸ் மூலம், வெளிநாட்டு டெஸ்ட்களில் இடத்தை பிடிக்க முடியும். அப்படி இடம் பிடித்து வெளிநாட்டு மண்ணில் ஒருவேளை சொதப்பிவிட்டால், உடனடியாக வேறு ஒருவரை களமிறக்கத்தான் அணி நிர்வாகம் முடிவு செய்யும். எனவே வெளிநாட்டு மண்ணில் நீங்கள் விளையாடும் விதம்தான் முக்கியமானது எனத்தெரிவித்தார்.

Story first published: Monday, March 7, 2022, 15:51 [IST]
Other articles published on Mar 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+