பரிதாப நிலைக்கு சென்ற வீரர்கள்.. இந்தியா vs இலங்கை புள்ளிவிவரம்.. என்னங்க இவ்வளவு மோசமா இருக்கு??
லக்னோ: இந்தியா - இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற எதிர்பார்ப்பு ஏக போகத்திற்கு ரசிகர்களிடம் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையே 3 போடிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இதில் முதல் போட்டி இன்று இரவு லக்னோவில் தொடங்குகிறது.
இந்திய அணியில் முன்னணி வீரர்கள் வெளியேறிய போதும், இளம் வீரர்களை நம்பி ரோகித் சர்மா களம் காணுகிறார்.

இலங்கை டி20 சீரிஸ்
பாகிஸ்தான் அணிக்கு அடுத்தபடியாக இந்தியாவுக்கு பரம எதிரிகளாக விளங்குவது இலங்கை அணி தான். அந்த அளவிற்கு எதிர்பார்ப்புகள் இருக்கும். இந்திய அணி கடைசியாக வெஸ்ட் இண்டீஸை 2 தொடர்களிலும் வைட் வாஷ் செய்த நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. ஆனால் இலங்கை அணிக்கு கடந்த சில போட்டிகள் சரிவர அமையவில்லை.

யாருக்கு வெற்றி
இலங்கை அணி கடைசியாக விளையாடிய 9 டி20 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. 8ல் தோல்வி தான். ஆனால் இந்திய அணியோ கடைசியாக விளையாடிய 9 சர்வதேச டி20 போட்டிகளில் ஒன்றே ஒன்றில் மட்டும் தான் தோல்வியை தழுவியுள்ளது. மற்ற அனைத்து போட்டிகளிலுமே வீர நடைதான்.

நேருக்கு நேர் விவரம்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா - இலங்கை அணிகள் இதுவரை 22 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 14 போட்டிகளிலும், இலங்கை அணி வெறும் 7 போட்டிகளிலுமே வெற்றி பெற்றுள்ளது. ஒரே ஒரு போட்டியில் மட்டும் முடிவு எட்ட்டப்படவில்லை. இந்த 22 போட்டிகளில் இந்தியாவில் நடந்தவை மொத்தமாக 11 போட்டிகள். அதில் இந்தியா 8 முறையும் இலங்கை 2 முறையும் வென்றுள்ளது.

ஆஸ்திரேலிய தொடர்
புள்ளி விவரங்களை வைத்து தற்போதைய அணியை மதிப்பிட முடியாது. ஆனால் இலங்கை அணியின் தற்போதைய நிலைமை கூட மோசமாகவே உள்ளது. அந்த அணி நேராக ஆஸ்திரேலியாவில் இருந்து வருகிறது. அங்கு ஆஸ்திரேலிய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1 - 4 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதனால் இந்திய அணிக்கு வெற்றி பெறுவது என்பது சுலபமான ஒன்றாக தான் இருக்கும்.


Click it and Unblock the Notifications