Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சினுக்கு செய்த "அதே துரோகம்.." இன்று ஜடேஜாவுக்கு.. பெரும் சர்ச்சையில் டிராவிட்.. என்ன ஆனது?!

மொஹாலி: இலங்கை அணியுடனான போட்டியில் ஜடேஜாவுக்கு ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் துரோகம் செய்துவிட்டதாக ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

இரு அணிகளும் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 574 ரன்களுக்கு டிக்ளர் செய்தது.

கெத்து காட்டிய ஜடேஜா

கெத்து காட்டிய ஜடேஜா

இந்திய அணியின் இந்த அபார ஸ்கோருக்கு முக்கிய காரணம் ரவீந்திர ஜடேஜா காட்டிய கிளாசிக் ஆட்டம் தான். 7வது வீரராக களமிறங்கிய ஜடேஜா தனது பங்கிற்கு ஒரு அரைசதம் வரை அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் சதம் அடித்து அசத்தினார். இலங்கை வீரர்கள் அவரை அவுட்டாக்க முடியாமல் புலம்பியது கேமிராக்களில் பதிவாகியிருந்தது.

ஏமாந்த ஜடேஜா

ஏமாந்த ஜடேஜா

ஷேன் வார்னேவின் சிஷ்யன் என்றழைக்கப்படும் ரவீந்திர ஜடேஜா, வார்னேவின் மறைவுக்கு பேட்டிங் மூலம் அஞ்சலி செலுத்தினார். ஆனால் அதன் பின்னர் அவரின் ஆட்டம் அடங்கவில்லை. 150 ரன்களை கடந்து இரட்டை சதத்தை நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். ஆனால் அங்கு தான் சிக்கலே உருவானது. ஜடேஜா 228 பந்துகளில் "175* " அடித்திருந்த போது டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா டிக்ளர் செய்வதாக அறிவித்தனர்.

20 நிமிடங்கள் முன்கூட்டியே..

20 நிமிடங்கள் முன்கூட்டியே..

வழக்கமாக இந்திய அணி பெரும்பாலும் உணவு மற்றும் தேனீர் இடைவெளிகள் போது டிக்ளர் செய்யும். அந்தவகையில் இன்று தேனீர் இடைவெளிக்கு இன்னும் 20 நிமிடங்கள் இருந்தது. அதற்குள் ஜடேஜா இரட்டை சதமடித்திருப்பார். ஆனால் வேண்டுமென்றே டிராவிட் டிக்ளர் செய்யக்கூறியதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. இதே தவறை சச்சின் விஷயத்திலும் டிராவிட் செய்துள்ளார்.

சச்சின் சந்தித்த பிரச்சினை

சச்சின் சந்தித்த பிரச்சினை

கடந்த 2004ம் ஆண்டு பாகிஸ்தானின் முல்தான் நகரத்தில் நடந்த டெஸ்டில் ராகுல் டிராவிட் தான் கேப்டனாக இருந்தார். அப்போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 194 ரன்களை குவித்து, இரட்டை சதத்தை பூர்த்தி செய்ய காத்திருந்தார். ஆனால் சரியாக டிராவிட் டிக்ளர் செய்வதாக அறிவித்தது சர்ச்சையை கிளப்பியது. இது பல வருடங்களுக்கு பேசுப்பொருளாக இருந்தது.

Recommended Video

Jadejaவின் 200 Miss ஆயிடிச்சு! Declare Controversyயில் Dravid, Rohit | OneIndia Tamil
மீண்டும் தவறு

மீண்டும் தவறு

இந்நிலையில் ஜடேஜா விஷயத்திலும் டிராவிட் இதே தவறை செய்துள்ளார். குறிப்பாக ரோகித் சர்மாவும் இதனை செய்துள்ளார் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ட்விட்டரில் ராகுல் டிராவிட்டிற்கு எதிராக ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

Story first published: Saturday, March 5, 2022, 18:56 [IST]
Other articles published on Mar 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+