For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்.. இந்திய அணியின் உத்தேச பட்டியல்.. ரோகித், கோலி இருப்பார்களா?

மும்பை : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் ஜூலை மாதம் 27ஆம் தேதி தொடங்கப்படுகிறது. இந்த போட்டிக்கான அட்டவணை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெறுகிறது. இந்த தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய ஒரு நாள் அணியை புதிய பயிற்சியாளர் கட்டமைக்க வேண்டும். இதனால் இலங்கைத் தொடரில் முழு பலத்துடன் கூடிய அணியை இந்தியா களமிறக்க போகிறது.

cricket ind vs sl india squad rohit sharma

இதனால் இந்த தொடரில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். கேப்டனாக ரோகித் சர்மா தான் இருப்பார். தொடக்க வீரர் இடத்தில் கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் 16 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்யப்படுவார்கள். நடு வரிசையில் விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் 15 பேர் கொண்ட அணியில் இருப்பார்கள்.

இதேபோன்று விக்கெட் கீப்பர்களாக கேஎல் ராகுல் மற்றும் சஞ்சு சாம்சனுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிகிறது. இதேபோன்று ரிஷப் பன்ட் டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய திறனை வெளிப்படுத்தினாலும் ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடும் அளவிற்கு அவர் தயாராகி விட்டாரா என்று தெரியவில்லை. இதனால் இரண்டு விக்கெட் கீப்பர்கள் மட்டுமே இடம்பெற வாய்ப்பு இருக்கிறது.

ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு இடம் கிடைக்க கூடும். சுழற் பந்துவீச்சாளராக குல்தீப் மற்றும் சாகல் என இரண்டு பவுலர்களுக்குமே வாய்ப்பு வழங்கப்பட கூடும். வேகப்பந்துவீச்சார்களாக பும்ரா, முகமது சமி, முகமது சிராஜ் ஆகிய மூன்று வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம்.

கூடுதலாக ஆர்ஸ்தீப் அல்லது ஆவேஷ் கான் ஆகியோர் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. இதில் முகமது சமி கடந்த உலகக்கோப்பை தொடருக்கு பிறகு காயம் காரணமாக எந்த போட்டியிலும் விளையாடாத நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணிக்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த உலகக்கோப்பை தொடருக்கு பிறகு காயம் காரணமாக எந்த போட்டியிலும் விளையாடாத நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணிக்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, July 8, 2024, 20:34 [IST]
Other articles published on Jul 8, 2024
English summary
India vs srilanka odi series - 16 members Probables list is here under Rohit captaincy இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்.. இந்திய அணியின் உத்தேச பட்டியல்.. ரோகித், கோலி இருப்பார்களா?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+