Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

35 ஆண்டாக யாரும் நெருங்க முடியாத சாதனை.. அசால்டாக தகர்த்தெறிந்த ஜடேஜா.. அசந்துபோன கபில் தேவ்!

மொஹாலி: 35 வருடமாக எந்தவொரு வீரராலும் அசைக்க முடியாமல் இருந்த சாதனையை ஜடேஜா தகர்த்துள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 574 ரன்களுக்கு டிக்ளர் செய்தது.

கெத்து காட்டிய ஜடேஜா

கெத்து காட்டிய ஜடேஜா

இந்திய அணியின் இந்த இமாலய ஸ்கோருக்கு முக்கிய காரணமாக ரவீந்திர ஜடேஜா திகழ்ந்தார். 7வது வீரராக களமிறங்கிய ஜடேஜா தனது பங்கிற்கு 50 - 60 ரன்களை சேர்ப்பார் என எதிர்பார்த்தனர். ஆனால் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் சதம் அடித்து அசத்தினார். இலங்கை வீரர்கள் அவரை அவுட்டாக்க முடியாமல் திணறி வந்தனர்.

ஏமாந்த ஜடேஜா

ஏமாந்த ஜடேஜா

சதமடித்த பிறகும் அடங்காத ஜடேஜா, 150 ரன்களை கடந்து இரட்டை சதத்தை நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். ஆனால் அதற்குள் ரோகித் சர்மா டிக்ளர் செய்ததால் தவறியது. மொத்தமாக 228 பந்துகளை சந்தித்த ரவீந்திர ஜடேஜா 175* ரன்களை குவித்து அசத்தினார்.

 35 ஆண்டு கால சாதனை

35 ஆண்டு கால சாதனை

இந்நிலையில் இதன் மூலம் முக்கிய சாதனை ஒன்றை அவர் படைத்துள்ளார். அதாவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 7வது வீரராக களமிறங்கி அதிக ஸ்கோரை அடித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னர் வரை இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் தான் முதலிடத்தில் இருந்து வந்தார். கடந்த 1986ம் ஆண்டு இதை இலங்கைக்கு எதிராக கான்பூரில் நடந்த டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த163 ரன்களே சாதனையாக இருந்தது.

சாதித்தவர்கள் பட்டியல்

சாதித்தவர்கள் பட்டியல்

7வது இடத்தில் களமிறங்கி அதிக ரன்களை குவித்தவர்கள் பட்டியல்.

175* ரன்கள் - ரவீந்திர ஜடேஜா vs இலங்கை, மொஹாலி,2022

163 ரன்கள் - கபில்தேவ் vs இலங்கை, கான்பூர் 1986.

156 ரன்கள் - ரிஷப் பண்ட் Vs ஆஸ்திரேலியா, சிட்னி, 2019.

Story first published: Saturday, March 5, 2022, 18:54 [IST]
Other articles published on Mar 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+