Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆபத்தில் கைவிட்ட விராட் கோலி.. கடும் அதிருப்தியில் ரோகித் சர்மா..இந்திய அணிக்குள் கிளம்பிய பிரச்சினை

லக்னோ: இக்கட்டான சூழலில் சீனியர் வீரர் விராட் கோலி கைவிட்டிருப்பதாக ரோகித் சர்மா அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.

Recommended Video

IND vs SL : Rohit Sharma will sacrifice these two players | Oneindia Tamil

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது.

இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு லக்னோவில் தொடங்கவுள்ளது.

இலங்கை சீரிஸ்

இலங்கை சீரிஸ்

ஆனால் இந்த டி20 தொடரில் இந்திய அணியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மிகவும் பலமான அணியாக பார்க்கப்படும் இந்திய அணியில் டாப் ஆர்டரி அஸ்திவாரமே காணவில்லை என்பது போல செய்துள்ளனர் சீனியர் வீரர்கள். ஆம், முக்கிய வீரர்கள் அனைவருமே இந்த தொடரில் இருந்து திடீரென வெளியேறிவிட்டனர்.

வீரர்கள் விலகல்

வீரர்கள் விலகல்

துணைக்கேப்டன் கே.எல்.ராகுல், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், பந்துவீச்சாளர் தீபக் சஹார் ஆகியோர் காயம் காரணமாக வெளியேறிவிட்டனர். ஆனால் சீனியர் வீரர் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் ஓய்வு வேண்டும் எனக்கூறி அணியில் இருந்து வெளியேறியுள்ளனர்.

கண்டுக்கொள்ளாத கோலி

கண்டுக்கொள்ளாத கோலி

அணியில் 2 முக்கிய பேட்ஸ்மேன்கள் இல்லை என்பதால், விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் மீண்டும் அணிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓய்வில் சென்ற கோலி மீண்டும் பபுளுக்குள் இணைய விருப்பப்படவில்லை. இதனால் இந்த இக்கட்டான சூழலில் இளம் வீரர்களை வைத்து தான் ரோகித் சர்மா சமாளிக்க வேண்டியுள்ளது.

கடும் அதிருப்தி

கடும் அதிருப்தி

சீனியர் வீரராக இருப்பவர், அணியின் வெற்றி முக்கியம் என நினைத்து மீண்டும் வந்திருக்க வேண்டும். ஆனால் எந்தவித கவலையும் இன்றி ஓய்வெடுக்க சென்றிருப்பது தவறு என ரோகித் சர்மா ரசிகர்கள் விளாசி வருகின்றனர். ரோகித் சர்மா மற்றும் அணி நிர்வாகமே இந்த அதிருப்தியில் இருப்பதாக தான் தெரிகிறது.

Story first published: Thursday, February 24, 2022, 20:45 [IST]
Other articles published on Feb 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+