“ப்பா.. என்ன பாசம் இது !!” கோலிக்காக ரோகித் செய்த சென்டிமென்ட் விஷயம்.. நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!
மொஹாலி: விராட் கோலியை கவுரவப்படுத்துவதற்காக கேப்டன் ரோகித் சர்மா செய்த விஷயம் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 574/8 ரன்களுக்கு டிக்ளர் செய்தது.

கோலி 100வது டெஸ்ட்
விராட் கோலி விளையாடும் 100வது டெஸ்ட் போட்டி என்பதால் அவரின் ஆட்டத்தின் மீது தான் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி வந்த அவர், தனது கவர் ட்ரைவ்கள் மூலம் விருந்து படைத்தார். எனினும் 45 ரன்கள் அடித்திருந்த போது எம்புல்டேனியா பந்தில் துரதிஷ்டவசமாக அவுட்டானார்.

கோலியை தடுத்த ரோகித் சர்மா
கோலியின் 100வது டெஸ்டில் இவ்வளவு தானா என்று சோகமடைந்த ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தினார் ரோகித். அதாவது இந்திய அணி முதல் இன்னிங்ஸ் பந்துவீச்சிற்கு களத்திற்குள் சென்ற போது விராட் கோலியும் சென்றார். ஆனால் கேப்டன் ரோகித் சர்மா அவரை திடீரென தடுத்து நிறுத்தி மீண்டும் உள்ளே சென்றுவிட்டு, வெளியே வாருங்கள் என கூறினார். எதற்காக இப்படி கூறுகிறார் என்று யாருக்கும் புரியவில்லை.

என்ன காரணம்
பின்னர் கோலி உள்ளே சென்ற பிறகு தான் தெரியவந்தது, "Guard of Honour" மரியாதை கொடுப்பதற்காக தான் ரோகித் அப்படி செய்துள்ளார். இரு புறமும் இந்திய வீரர்கள் நின்று கைத்தட்ட, விராட் கோலி நடுவில் பெருமையுடன் சிரித்துக்கொண்டே நடந்து வந்தார். இதுபோன்ற மரியாதைகள், கிரிக்கெட்டில் பெரும் சாதனைகளை கடந்தவர்களுக்கு மட்டும் கொடுப்பவையாகும். இன்று கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது.
Recommended Video

இருவருக்குமான பிரச்சினை
விராட் கோலிக்கும் ரோகித் சர்மாவுக்கு இடையே பிரச்சினை இருப்பதாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இன்று ரோகித் செய்த இந்த விஷயத்தால், அந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் முடிவு கட்டப்பட்டுள்ளது. மேலும் களத்திலும் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஐடியாக்களை பகிர்ந்து விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications