Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“எனக்கு சுத்தமா புடிக்கல” சீனியர் வீரர்களின் திடீர் விலகல்.. ரோகித் சர்மா அதிருப்தி வார்த்தைகள்!!

லக்னோ: இலங்கை தொடரில் சீனியர் வீரர்கள் விலகியிருப்பது குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை மாலை தொடங்கவுள்ளது.

சீனியர் வீரர்கள் இல்லை

சீனியர் வீரர்கள் இல்லை

ஆனால் இதில் இந்திய அணிக்கு தான் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆகியோர் ஓய்வுக்காக தொடரில் இருந்து விலகியுள்ளனர். துணைக்கேப்டன் கே.எல்.ராகுல், தீபக் சஹார், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறுகிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோகித் சர்மா அதிருப்தி

ரோகித் சர்மா அதிருப்தி

இந்நிலையில் இந்த கடைசி நேர மாற்றங்கள் குறித்து ரோகித் சர்மா அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், சீனியர் வீரர்கள் இதுபோன்ற காரணங்களுக்காக விலகுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் காயத்தால் வெளியேறினால் அதன் விளைவுகள் சிரமமாக இருக்கும். வீரர்கள் ஒரு முறை காயத்தால் பாதிக்கப்பட்டால் அவ்வளவு சீக்கிரம் மீண்டு வர முடியாது.

சிரமம் எனக்குதான் தெரியும்

சிரமம் எனக்குதான் தெரியும்

காயத்தால் பாதிப்படைந்த அனுபவங்கள் எனக்கும் உண்டு. எனவே இனி சீனியர் வீரர்கள் யாரும் காயத்தால் பாதிக்கப்படக்கூடாது என்பதே எனது ஆசை. இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர். எனவே அவர்களை வைத்து சுழற்சி முறையில் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

சிக்கலான சூழல்

சிக்கலான சூழல்

என்னதான் அணியில் இளம் வீரர்கள் இருந்தாலும், 5 சீனியர் வீரர்கள் இல்லாதது ரோகித் சர்மாவுக்கு தான் பெரும் பிரச்சினையாக அமையப்போகிறது. குறிப்பாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் கலக்கிய 3 பேட்ஸ்மேன்களும் இல்லை. இதனால் கடும் அதிருப்தியில் ரோகித் சர்மா இருப்பார் என்று தெரிகிறது.

Story first published: Wednesday, February 23, 2022, 13:52 [IST]
Other articles published on Feb 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+