Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் சர்மா அடித்த ஒரு சிக்ஸர்.. பரிதாப நிலையில் ரசிகர்.. மருத்துவ ரிப்போர்ட் வெளியானது!!

பெங்களூரு: ரோகித் சர்மா அடித்த சிக்ஸரால் ரசிகர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியானது தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

பகலிரவு போட்டியாக நடைபெறும் இதில் இந்திய அணி தொடக்கதில் இருந்தே, இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்திய அணி அபாரம்

இந்திய அணி அபாரம்

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 252 ரன்களும், இலங்கை அணி 109 ரன்கள் மட்டுமே குவித்தன. இதன் பின்னர் 143 ரன்கள் முன்னிலை என்ற நிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா 303 ரன்களுக்கு டிக்ளர் செய்தது. இதனால் இலங்கை அணிக்கு 447 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

பார்வையாளர்கள்

பார்வையாளர்கள்

இந்நிலையில் இந்திய அணியின் வெற்றியை விட, மற்றொரு விஷயம் தான் பேசுப்பொருளாகி வருகிறது. இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு முழு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி 22,000 ரசிகர்கள் நேரில் இந்த போட்டியை கண்டுகளித்து வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.

அதிர்ச்சி நிகழ்வு

அதிர்ச்சி நிகழ்வு

பெங்களூரைச் சேர்ந்த 22 வயது ரசிகர் ஒருவர் டி கார்ப்பரேட் பாக்ஸ் பிரிவில் அமர்ந்து போட்டியை ரசித்து கொண்டிருந்தார். அப்போது இலங்கை வீரர் பெர்னாண்டோ வீசிய பந்தில் ரோகித் சர்மா அடித்த சிக்ஸர் ஒன்று ரசிகர்கள் நேராக அவரின் முகத்தில் பலமாக பட்டு பதம் பார்த்தது.

Recommended Video

Ind vs SL Kohli, Dravid congratulate Lakmal after he leaves field in his last match | Oneindia Tamil
மருத்துவ அறிக்கை

மருத்துவ அறிக்கை

இதனையடுத்து அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மருத்துவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் அந்த நபரின் மூக்கு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளாதாகவும், மேலும் தையல் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக போட்டிகளின் போது ரசிகர்களுக்கு காயம் ஏற்படுவது சகஜம் தான். ஆனால் இப்படி தையல் போடும் அளவிற்கு ஆனது பேசுப்பொருளாகியுள்ளது.

Story first published: Monday, March 14, 2022, 18:04 [IST]
Other articles published on Mar 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+