For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய வீரர்கள் நெருங்காத இடம்.. புதிய உலக சாதனை படைத்த ரோகித்.. பாகிஸ்தானின் சாதனைகள் முறியடிப்பு!

லக்னோ: உலகில் நீண்ட காலமாக பாகிஸ்தான் வீரர் வைத்திருந்த சாதனையை இந்திய கேப்டன் ரோகித் சர்மா தகர்த்து அசத்தியுள்ளார்.

Recommended Video

IND vs SL : T20 Cricket-ல் புதிய சாதனை படைத்த Rohit Sharma

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று நடைபெற்று முடிந்தது.

கடைசி டி20 போட்டியிலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 3 - 0 என வைட் வாஷ் செய்தது.

இலங்கை டி20 தொடர்

இலங்கை டி20 தொடர்

கடந்த நவம்பரில் டி20 அணியின் கேப்டனாக பதவியேற்றுக்கொண்ட ரோகித் சர்மா, இதுவரை ஒரு போட்டியில் கூட சந்திக்கவில்லை. நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை என அடுத்தடுத்து 3 அணிகளை வைட் வாஷ் செய்து அசத்தியுள்ளார். தென்னாப்பிரிக்க தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவினாலும், அதனை ரோகித் கேப்டன்சி செய்யவில்லை.

புதிய சாதனை

புதிய சாதனை

இந்நிலையில் நேற்றைய போட்டியின் மூலம் ரோகித் புதிய உலக சாதனையை படைத்துள்ளார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடி வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்னர் வரை பாகிஸ்தானின் சோயிப் மாலிக் 124 போட்டிகளில் ஆடியதே நீண்ட நாட்களாக சாதனையாக இருந்து வந்தது. தற்போது ரோகித் சர்மா 125 போட்டிகளில் விளையாடி அதனை தகர்த்துள்ளார்.

டாப் 5 வீரர்கள்

டாப் 5 வீரர்கள்

இந்த சர்வதேச பட்டியலில் ரோகித், சோயிப்பிற்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் வீரர் முகமது ஹஃபீஸ் 119 போட்டிகள், இங்கிலாந்து வீரர் இயான் மோர்கன் 115 போட்டிகள், வங்கதேச வீரர் முகமதுல்லா 113 போட்டிகள் என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். வேறு எந்த இந்திய வீரரும் டாப் 5 இடங்களில் இல்லை.

இந்திய வீரர்கள்

இந்திய வீரர்கள்

இந்திய வீரர்களின் பட்டியலை பொறுத்தவரை ரோகித் மட்டும் தான் 100 சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாடிய வீரர் என்ற பெருமையுடன் உள்ளார். முன்னாள் கேப்டன் கேப்டன் தோனி 98 போட்டிகளிலும், விராட் கோலி 97 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். விரைவில் கோலியும் புதிய மைல்கல்லை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, February 28, 2022, 10:55 [IST]
Other articles published on Feb 28, 2022
English summary
Rohit sharma Surpass Pakistan player Shoaib Malik's to set new World Record
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+