Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL - யாராலும் தொட முடியாத தோனி சாதனை.. முறியடித்த ரோகித் சர்மா..இனி பக்கத்தில்கூட வர முடியாது

மும்பை : டி20 உலக கோப்பையை வென்றதை எடுத்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட் இல் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரில் கேப்டனாக தொடர்கிறார். 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தான் இந்திய அணியை வழிநடத்துவார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அன்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த சூழலில் இதற்காக இந்திய அணியை தயார் படுத்தும் முயற்சியில் புதிய பயிற்சியாளராக இருக்கும் கம்பீர் செயல்பட்டு வருகிறார். இதனை அடுத்து டி20 உலக கோப்பைக்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ள ரோகித் சர்மா, இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கேப்டனாக பணிபுரிந்தார்.

ind vs sl Virat kohli Rohit sharma ms dhoni cricket

இந்த தொடரில் இந்தியா சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் ஒரு நாள் தொடரில் பின்தங்கி இருக்கிறது. இது ரோகித் சர்மாவுக்கு பின்னடைவாக கருதப்பட்டாலும், ஒரு சாதனையை அவர் செய்திருக்கிறார். அதன்படி யாருமே தொட முடியாது என நினைக்கப்பட்ட தோனியின் சாதனை தான் தற்போது ரோகித் சர்மா முறியடித்திருக்கிறார்.

அதாவது இந்திய அணியின் தலைசிறந்த ஒரு நாள் கேப்டனாக விளங்கிய தோனி கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு நாள் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அதன் பிறகு ஆசிய கோப்பையில் 2018 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனி தலைமை தாங்கினார்.இதன் மூலம் இந்திய ஒரு நாள் அணியை தலைமை தாங்கிய வயதான கேப்டன் என்ற பெருமை தோனிக்கு இருந்தது.

இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என நினைக்கப்பட்ட நிலையில் தற்போது அதை ரோகித் சர்மா உடைத்திருக்கிறார். இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தலைமை தாங்கியதன் மூலம் இந்திய அணியின் வயதான கேப்டன் என்ற பெருமை ரோகித் சர்மாவுக்கு கிடைத்திருக்கிறது.

ரோகித் சர்மா தற்போது 37 வயது 96 நாட்கள் இருக்கிறார். இதற்கு முன்பு தோனி 37 வயது 80 நாட்களில் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்தார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஷிகர் தவான் இருக்கிறார். அவர் 36 வயது 360 நாட்களில் இந்திய அணி கேப்டனாக இருந்தார்.

இதற்கெல்லாம் முன்பாக அசாருதீன் 36 வயது 124 நாட்களில் 1999 ஆம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியின் வயதான கேப்டனாக இருந்தார். அதற்கெல்லாம் முன்பு 1985 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் கவாஸ்கர் 35 வயது 243 நாட்களில் இந்திய ஒருநாள் அணிக்கு தலைமை தாங்கினார்.

ரோகித் சர்மாவின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்றால் தற்போது இருக்கும் இளம் வீரர்கள் இன்னும் 10- 15 ஆண்டுகளுக்கு கேப்டனாக தொடர வேண்டும். அது முடியாத காரியம் என்பதால் ரோகித் சர்மாவின் ரெக்கார்ட் முறியடிக்கப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, August 5, 2024, 23:41 [IST]
Other articles published on Aug 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+