ரோகித்துக்கு எதிரே நிற்கும் எமன்!! 10 பந்துக்கூட தாண்ட மாட்டார் போல.. சமீராவின் கெத்தான ரெக்கார்ட்
லக்னோ: இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் தூணாக இருக்கக்கூடிய ரோகித் சர்மாவுக்கு பெரும் கண்டம் உள்ளது.
இரு அணிகளும் மோதவுள்ள முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு லக்னோவில் நடைபெறவுள்ளது.
ஆஸ்திரேலியாவுடன் தோல்வியை சந்தித்த கையுடன் இலங்கை அணியும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான அபார வெற்றிக்கு பிறகு இந்திய அணியும் களம் காணுகின்றன.

முதல் டி20 போட்டி
இந்த தொடருக்கான இந்திய அணியில் பெரும்பாலும் இளம் வீரர்கள் மட்டுமே நிறைந்துள்ளனர். ஆம், விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் ஓய்வுக்காக செல்ல மற்றவர்கள் காயம் காரணமாக வெளியேறியுள்ளனர். இதனால் ப்ளேயிங் 11ல் ரோகித், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகிய 4 சீனியர்கள் மட்டுமே அணியை காப்பாற்ற வேண்டும்.

முழு பொறுப்பு
பேட்டிங்கை பொறுத்தவரையில் ரோகித் சர்மா தான் அணியின் தூணாக இருக்கிறார். மற்ற அனைவருமே அனுபவம் குறைந்த வீரர்கள். ஆனால் ரோகித் சர்மாவே இந்த போட்டியில் 10 பந்துகளுக்கு மேல் களத்தில் நிற்பாரா என்பது போல பெரும் கண்டம் காத்துள்ளது. இதற்கு காரணம் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்தா சமீரா தான்.

மோசமான புள்ளிவிவரம்
சமீராவின் பவுலிங்கில் ரோகித் படு மோசமாக திணறியுள்ளார். இதுவரை ரோகித்திற்கு 24 பந்துகளை சமீரா வீசியுள்ளார். இந்த 24 பந்துகளுக்குள் 4 முறை ரோகித்தின் விக்கெட் பறிபோயுள்ளது. அவர் அடித்த ரன்களும் வெறும் 24 மட்டும் தான். தோராயமாக 10 பந்துகள் கூட தாண்ட முடியாத சூழலில் இருக்கிறார். இந்த வரலாற்றை ரோகித் இன்று மாற்றி அமைத்தே தீர வேண்டும்.
Recommended Video

ஒரு வேளை அவுட்டானால்
ஒருவேளை மீண்டும் சொதப்பினால், டாப் ஆர்டரில் பெரிய இடி வந்து விழும் என்பதில் சந்தேகமே இல்லை. அனுபவம் குறைந்த வீரர்களான ருதுராஜ் கெயிக்வாட், இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் எந்த அளவிற்கு சமீராவின் பவுலிங்கில் நிற்பார்கள் என்பது சந்தேகமே.


Click it and Unblock the Notifications