Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்களுக்கு எமனே அதுதான்.. ரோகித்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த கவாஸ்கர்.. கேட்கலைனா அவ்வளவுதான்!

மும்பை: ரோகித் சர்மா, ஒரு முக்கிய தவறை மீண்டும் மீண்டும் செய்து வருவதாக சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

Rohit-க்கு Gavaskar கடும் எச்சரிக்கை | Jadeja-க்கு BCCI துரோகம் | 10 Star Players Injured

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

முதல் டெஸ்டில் மிடில் ஆர்டர் ஓரளவிற்கு கைக்கொடுக்க, ஜடேஜா 175* மற்றும் 9 விக்கெட்டுகள் எடுத்து வெற்றியை தேடிக் கொடுத்தார்.

ரோகித்தின் பிரச்சினை

ரோகித்தின் பிரச்சினை

ஆனால் ரோகித் சர்மாவால் பெரியளவில் சோபிக்க முடியவில்லை. ரோகித் சர்மாவின் மிகப்பெரிய பலம் புல் ஷாட் தான். அவர் அடித்தால், கட்டாயம் அந்த பந்து சிக்ஸர் தான் செல்லும் என ரசிகர்கள் நம்புவார்கள். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு புல்ஷாட்டே எமனாக வந்து நின்றுள்ளது. அதனை சற்றும் யோசிக்காமல் உள்ளார்.

பவுலர்கள் எடுக்கும் ரிஸ்க்

பவுலர்கள் எடுக்கும் ரிஸ்க்

ரோகித் சர்மா நின்றுவிட்டால் சதமடிக்காமல் போகமாட்டார். எனவே அவரை முன்கூட்டியே அவுட்டாக்க, பவுலர்கள் தொடர்ந்து ஷார்ட் பால்களை வீசி, ரோகித் சர்மாவுக்கு ஆசையை தூண்டுகின்றனர். அவரும் ஆர்வக்கோளாறில் புல்ஷாட்டை ஆட முயன்று கேட்ச் கொடுத்து சொற்ப ரன்களுக்கு நடையை கட்டிவிடுகிறார்.

கவாஸ்கர் விடுத்த எச்சரிக்கை

கவாஸ்கர் விடுத்த எச்சரிக்கை

இந்நிலையில் இதற்கு கவாஸ்கர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். புல்ஷாட் அடிப்பது குறித்து ரோகித் யோசிக்க வேண்டும். அது அவருக்கு பிடித்த ஷாட்தான். இருப்பினும், தற்போது அதனை எதிரணி வீரர்கள் ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். 2, 3 சிக்ஸர்கள் சென்றாலும் கவலையில்லை, தொடர்ந்து ஷார்ட் பால் போட்டு விக்கெட் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வருகின்றனர். ரோகித் சர்மாவும் பிடிவாதமாக அதனை தான் செய்கிறார்.

எப்போது அடிக்க வேண்டும்

எப்போது அடிக்க வேண்டும்

எனவே இனி ரோகித் அதனை பெரிய பிரச்னையாக கருத்தில் கொள்ள வேண்டும். 3 பந்துகளை நன்றாக ஆடிவிட்டு, 4வது பந்தில் ஆட்டமிழப்பது சரியில்லை. 80, 90, 100 என ரன்களை குவிக்கும் வரை அவர் புல்ஷாட்களை அடிக்காமல் இருப்பது தான் அவருக்கு நல்லது என கவாஸ்கர் கூறியுள்ளார்.

Story first published: Friday, March 11, 2022, 17:18 [IST]
Other articles published on Mar 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+