For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“ஓவரா புகழாதீங்க.. அவருகிட்ட அது இல்ல”.. இஷான் கிஷானுக்கு எதிராக கவாஸ்கர் கருத்து.. சரிதானே!!

லக்னோ: இஷான் கிஷானின் சிறப்பான ஆட்டத்தை அனைவரும் பாராட்டும் நிலையில் கவாஸ்கர் மட்டும் முக்கிய குறையை கூறியுள்ளார்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

இந்த போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெற்றிக்கு முக்கிய காரணமாக இஷான் கிஷண் அமைந்தார்.'

இஷானுக்கு குவியும் பாராட்டு

இஷானுக்கு குவியும் பாராட்டு

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3 டி20 போட்டிகளிலும் இஷான் மீது விமர்சனங்கள் எழுந்தன. அவரின் ஸ்டரைக் ரேட் ஏன் இவ்வளவு மோசமாக உள்ளது எனக்கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அதற்கெல்லாம் நேற்று பதில் கொடுத்தார். 56 பந்துகளை சந்தித்த அவர், 10 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 89 ரன்களை விளாசினார். இதற்காக அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

குறைக்கூறிய கவாஸ்கர்

குறைக்கூறிய கவாஸ்கர்

இந்நிலையில் கவாஸ்கர் மட்டும் குறைக்கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இஷானின் பேட்டிங் ஒரு சிறப்பான அறிகுறியை தந்துள்ளது. ஆனால் இது முதல் போட்டி தான். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் எவ்வளவு திணறினார் என்பதை அனைவரும் பார்த்தோம். அங்கிருந்து லெந்த், வேகம் மற்றும் பவுன்சர்களை விட இங்கு குறைவாக இருந்தது. இங்கு பந்துகள் தோள்பட்டை வரை தான் வந்தது. இதனால் அவருக்கு சுலபமாக இருந்தது.

சில ஷாட்கள்

சில ஷாட்கள்

இதற்காக அவரின் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் குறைகூறவில்லை. சில ட்ரைவ் ஷாட்கள், புல் ஷாட்கள் மிகச்சிறப்பாக இருந்தன. எனினும் இது முதல் போட்டி தான். அடுத்த 2 போட்டிகளிலும் அவரின் நிலையான ஆட்டம் என்வென்பது தெரிந்துவிடும். ஒருவேளை அதிலும் சிறப்பாக ஆடிவிட்டால் இந்திய அணிக்கு பெரும் நன்மை தான்.

ஒருசேர 3 திறமைகள்

ஒருசேர 3 திறமைகள்

ஏனென்றால் இஷானிடம் மூன்று திறமைகள் ஒருசேர உள்ளது. விக்கெட் கீப்பர், இடதுகை பேட்ஸ்மேன், டாப் ஆர்டர்- மிடில் ஆர்டர் என எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதிரடியாக ஆடுபவர். இந்த அத்தனையும் நமக்கு நன்மையாக இருக்கும். பொருத்திருந்து பார்க்கலாம் என கவாஸ்கர் கூறியுள்ளார்.

Story first published: Friday, February 25, 2022, 12:14 [IST]
Other articles published on Feb 25, 2022
English summary
Sunil gavaskar thinks Ishan kishan should show some consistency, after massive knock in 1st t20 against srilanka
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+