Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கைக்கு எதிரான டி20, டெஸ்ட் அணி.. சீனியர்கள் அதிரடி நீக்கம்.. இளைஞர்களுக்கு வாய்ப்பு

மும்பை: இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இல்ங்கை அணி மூன்று டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முதல் டி20 போட்டி வரும் 24ஆம் தேதி லக்னோவில் தொடங்குகிறது. 2வது டி20 போட்டி வரும் 26ஆம் தேதி தர்மசாலாவிலும், 3வது டி20 போட்டி வரும் 27ஆம் தேதி தர்மசாலாவிலும் நடைபெறுகிறது

இதனைத் தொடர்ந்து மார்ச் 4 ஆம் தேதி இலங்கைக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியிலும், 2வது டெஸ்ட் போட்டி 12ஆம் தேதி பெங்களூருவிலும் நடைபெறுகிறது.

பல மாற்றங்கள்

பல மாற்றங்கள்

இந்த நிலையில், மும்பையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மாவும், காணொலி காட்சி மூலம் கேப்டன் ரோகித் சர்மாவும் பங்கேற்றனர். மருத்துவ குழு ஆலோசனை படி விராட் கோலி, ரிஷப் பண்ட், ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஜடேஜா, பும்ரா ஆகியோர் டி20 அணிக்கு திரும்பியுள்ளனர்.

இந்திய டி20 அணி

இந்திய டி20 அணி

ரோகித் சர்மா தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய டி20 அணியில் ருத்துராஜ், இஷான் கிஷன்,சூர்யகுமார்,ஸ்ரேயாஸ் ஐயர்,வெங்கடேஷ் ஐயர், பும்ரா, புவனேஸ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்சல் பட்டேல், முகமது சிராஜ், சஞ்சு சாம்சன், ஜடேஜா, ரவி பிஸ்னாய், குல்தீப்,அவேஷ் கான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதிரடி நீக்கம்

அதிரடி நீக்கம்

இதே போன்று டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் டெஸ்ட் தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று அஸ்வின், ஜடேஜா, முகமது ஷமி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். அனுபவ வீரர்கள் புஜாரா, ரஹானே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

இந்திய டெஸ்ட் அணி

இந்திய டெஸ்ட் அணி

ரோகித் சர்மா தலைமையிலான 18 பேர் கொண்ட டெஸ்ட் அணியில் மாயங் அகர்வால், பிரியங் பாஞ்சால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, சுப்மான் கில், ரிஷப் பண்ட், பரத், அஸ்வின், ஜடேஜா, ஜெயந்த் யாதவ்,குல்தீப், பும்ரா, ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ், சௌரப் குமார்.

Story first published: Saturday, February 19, 2022, 17:41 [IST]
Other articles published on Feb 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+