
அணி மாற்றங்கள்
ஓப்பனிங்கை பொறுத்தவரையில் மீண்டும் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ரோகித் சர்மா- மயங்க் அகர்வால் ஜோடி கடந்த முதல் டெஸ்ட் போது பெரியளவில் சோபிக்கவில்லை. எனினும் அந்த ஜோடியை பிரிக்காமல் மீண்டும் களமிறக்கியுள்ளனர்.

பலமான மிடில் ஆர்டர்
மிடில் ஆர்டரை பொறுத்தவரையில் கடந்த போட்டியில் இருந்த அதே வரிசை தான் உள்ளது. முதல் விக்கெட்டிற்கு ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் என அடுத்தடுத்து களமிறங்கவுள்ளனர். இதில் அனைவருமே கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

பந்துவீச்சு படை
பந்துவீச்சை பொறுத்தவரையில் ஆல்ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் கூட்டணி அமைக்கவுள்ளனர். வேகப்பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா,முகமது ஷமி ஜோடி கூட்டணி அமைக்கவுள்ளது. 5வது பவுலராக இந்த முறையும் சுழற்பந்துவீச்சாளரை தேர்வு செய்துள்ளார் ரோகித். அக்ஷர் பட்டேல் அணிக்கு திரும்பியுள்ளார்.

புறக்கணிக்கப்பட்ட வீரர்
சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி வீரரான முகமது ஷமி நல்ல அனுபவம் பெற்றவர். களத்தின் தன்மை எப்படி மாறும் என்பது அவருக்கு தெரியும். ஆனால் அவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இதற்கு காரணம் செம்மண் பிட்ச் ஆகும். இந்த களத்தில் சிறப்பாக பவுலிங் வீசக்கூடியவர் அக்ஷர் பட்டேல். இதனால் அவரை தேர்வு செய்துள்ளனர்.

பிட்ச் நிலைமை
இந்த களம் நல்ல பேட்டிங் பிட்சாக பார்க்கப்படுகிறது. முதல் 2 நாட்களுக்கு பிட்ச் பேட்டிங்கிற்கு நல்ல ஒத்துழைப்பை தரும். அதன்பின்னர் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக அமையும். அதன்படி பார்த்தால் இந்திய அணி எடுத்துள்ள முடிவு சிறப்பான ஒன்று தான்.
Recommended Video

ப்ளேயிங் 11 என்ன
ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஜடேஜா, அஸ்வின், அக்ஷர் பட்டேல், பும்ரா, ஷமி,


Click it and Unblock the Notifications