Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவரை ஏன் எடுத்தீங்க? தமிழக வீரர் ஷாருக்கானுக்கு எதிராக கொதிக்கும் வடஇந்தியர்கள்.. ஏன் இந்த வன்மம்?

அகமதாபாத்: இந்திய ஒருநாள் அணியில் தமிழக வீரர் ஷாருக்கானை சேர்த்ததற்காக வட இந்திய ரசிகர்கள் கொந்தளிப்பில் விமர்சனங்களை வீசி வருகின்றனர்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத்தில் தொடங்கவுள்ளது.

இதற்காக 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்ட போதும், கொரோனா பாதிப்பால் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அகமதாபாத் சென்ற ஷிகர் தவான், ருதுராஜ் கெயிக்வாட், ஸ்ரேயாஸ், அக்‌ஷர், நவ்தீப் சைனி ஆகியோருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து உடனடியாக இஷான் கிஷான், தீபக் ஹூடா, மயங்க் அகர்வால் ஆகியோர் மாற்று வீரர்களாக தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இதில் இஷான் ஓப்பனிங்கிற்கும், தீபக் ஹூடா மிடில் ஆர்டரில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஷாருக்கான் சேர்ப்பு

ஷாருக்கான் சேர்ப்பு

இந்நிலையில் நேற்று திடீரென தமிழக வீரர் ஷாருக்கானையும் முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் சேர்ப்பதாக பிசிசிஐ அறிவித்தது. சையது முஷ்டக் அலி கோப்பையில் சிறப்பாக விளையாடியதன் அடிப்படையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே ஃபினிஷர் பணிக்காக ஹூடா சேர்க்கப்பட்டுள்ள சூழலில் அவரை புறக்கணித்துவிட்டு ஷாருக்கானை அந்த இடத்திற்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குவியும் விமர்சனங்கள்

குவியும் விமர்சனங்கள்

இந்த முடிவுக்காக வட இந்திய ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் சண்டைப்போட்ட அவர்கள், சையது முஷ்டக் அலி எனும் ஒரு தொடரில் சிறப்பாக ஆடிவிட்டால், உடனே சர்வதேச போட்டியில் வாய்ப்பு கொடுத்துவிடுவதா, அப்படி என்ன செய்துவிட்டார் அந்த ஷாருக்கான். மயங்க் அகர்வால், ஹூடா போன்ற சீனியர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கும் போது, நேற்று வந்த வீரர்களுக்கெல்லாம் வாய்ப்பு தரக்கூடாது. அவர்களை புறக்கணிக்க வேண்டும் என கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

ஏன் ஷாருக்கான் தேவை

ஏன் ஷாருக்கான் தேவை

ஆனால் விமர்சிக்கும் அளவிற்கு ஷாருக்கானின் புள்ளிவிவரங்கள் இல்லை. கடந்த சையது முஷ்டக் அலி கோப்பையில் 8 போட்டிகளில் விளையாடிய ஷாருக்கான், 253 ரன்களை குவித்தார். அவரின் சராசரி 42.16 ஆகும். இந்த தொடரில் அதிக சிக்ஸர்களை விளாசியவரும் ஷாருக்கான் தான். இதே போல ஐபிஎல் தொடரில் கடந்தாண்டு பஞ்சாப் அணிக்காக லோயர் ஆர்டரில் விளையாடிய அவர், 11 போட்டிகளில் 153 ரன்களை அடித்தார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 134.21 ஆகும்.

Recommended Video

Virat Kohli மீது வைக்கப்பட்ட விமர்சனம்.. Rohit Sharma கொடுத்த பதிலடி!
அடுத்த ஃபினிஷர்

அடுத்த ஃபினிஷர்

இதுமட்டுமல்லாமல் ஹர்திக் இல்லாத இந்த சமயத்தில் இந்திய அணியின் சிறந்த ஃபினிஷராக ஷாருக் மட்டுமே இருப்பார். இதற்கு உதாரணம் சையது முஷ்டக் அலி இறுதிப்போட்டியில் தமிழக அணி வெற்றி பெற கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது சிக்ஸர் விளாசி சாம்பியன் பட்டம் வென்றுக் கொடுத்தார். அந்த தொடரில் மொத்தம் 20 சிக்ஸர்கள், ஐபிஎல் தொடரில் மொத்தம் 10 சிக்ஸர்கள் என கடைசி நேரத்தில் பெரியளவில் ரன் குவிக்கிறார். எனவே அவர் தான் அடுத்த தோனி என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Story first published: Monday, February 7, 2022, 0:02 [IST]
Other articles published on Feb 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+