Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் சர்மா செய்த துரோகம்?.. கோபத்தில் பாண்ட்யா சகோதரர்கள்.. இளம் வீரரால் வந்த பிரச்சினை!

அகமதாபாத்: இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா துரோகம் செய்துவிட்டதாக தீடிரென மும்பை அணி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டிக்கான ப்ளேயிங் 11 ஐ தேர்வில் செய்வதில் இந்திய அணி பல்வேறு குழப்பங்களில் சிக்கி இறுதியாக முடிவெடுத்துள்ளது.

ப்ளேயிங் 11 மாற்றம்

ப்ளேயிங் 11 மாற்றம்

முன்னணி வீரர்களான ஷிகர் தவான், ருதுராஜ் கெயிக்வாட், ஸ்ரேயாஸ் உட்பட 5 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து அவர்களுக்கு மாற்று வீரர்களாக மயங்க் அகர்வால், இஷான் கிஷான், தீபக் ஹூடா, ஷாருக்கான் ஆகியோர் இந்திய அணிக்குள் தேர்வு செய்யப்பட்டனர்.

ரோகித் சர்மா துரோகம்?

ரோகித் சர்மா துரோகம்?

இந்நிலையில் இதில் தீபக் ஹூடாவை அணிக்குள் எடுத்தது தான் ஆச்சரியம். இந்திய அணியின் மிடில் ஆர்டரில் பல முன்னணி வீரர்கள் இருந்த போதும் திடீரென தீபக் ஹூடாவை கொண்டு வந்ததால் சர்ச்சை கிளம்பியுள்ளது. ஏனென்றால் கடந்தாண்டு பாண்ட்யா சகோதரர்களால் தீபக் ஹூடா பட்ட அவமானங்கள் தான்.

என்ன பின்னணி

என்ன பின்னணி

கடந்த 2021ம் ஆண்டு சையது முஷ்டக் அலி தொடரின் போது பரோடா அணிக்காக சேர்க்கப்பட்ட தீபக் ஹூடா, கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில், கேப்டன் க்ருணால் பாண்ட்யா வேண்டுமென்றே எனக்கு அழுத்தம் தருகிறார். சக வீரர்கள் முன்பும், மற்ற அணி வீரர்கள் முன்பும் மிகவும் மோசமான வார்த்தைகளைக் கூறி திட்டிவருகிறார் என வெளிப்படையாக கடிதம் வெளியிட்டார்.

நீக்கம்

நீக்கம்

இதனை அறிந்த பரோடா கிரிக்கெட் வாரியம், க்ருணால் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், தீபக் ஹூடாவை அந்த சீசனில் சஸ்பெண்ட் செய்தது. இதனையடுத்து அவர் பரோடா அணியை விட்டே வெளியேறினார்.மேலும் மும்பை அணிக்காக விளையாடிய பிரபலமான பாண்ட்யா சகோதரர்கள் சேர்ந்து பரோடா அணியில் தங்களுக்கு வேண்டும் என நினைக்கும் வீரர்களை தவிர்த்து திறமையான வீரர்களை நீக்குவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

கோபத்தில் மும்பை ரசிகர்கள்

கோபத்தில் மும்பை ரசிகர்கள்

இப்படிப்பட்ட சூழல் இருக்க தான் ரோகித் அவரை ப்ளேயிங் 11க்குள் எடுத்தார். பாண்ட்யா சகோதரர்களின் மிக நெருங்கிய நண்பராக பார்க்கப்படும் ரோகித் சர்மா, ஆல்ரவுண்டருக்காக க்ருணால் பாண்ட்யாவை அழைத்துக் கொள்ளாமல் சம்பந்தம் இன்றி ஹூடாவை அழைத்துள்ளார். இத்தனை காலம் மும்பை அணிக்காக ஒன்றாக விளையாடிய போதும், பாண்ட்யா க்ருணால் பாண்ட்யாவை ரோகித் கண்டுக்கொள்ளவில்லை என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

தகுதியான வீரர்

தகுதியான வீரர்

இது ஒருபுறம் இருந்தாலும், தீபக் ஹுடா இந்திய அணியில் இடம்பெற்றதற்கு பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தை பெற்றார். மேலும் ராஜஸ்தானுக்கு எதிராக அவர் அடித்த அதிவேக அரைசதம் தான் இன்று இந்திய அணியில் ஃபினிஷராக வாய்ப்பை பெற்றுக்கொடுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, February 7, 2022, 0:00 [IST]
Other articles published on Feb 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+