Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் முதல் ஒருநாள் போட்டி.. பிளேயிங் XI - பிட்ச் ரிப்போர்ட் இதோ..!!

மும்பை: இந்தியா Vs மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி வரும் 6ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டிக்காக அகமதாபாத்தில் பயோ பபுளில் உள்ள இந்திய அணி வீரர்கள் தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டு ஷிகர் தவான்,ருத்துராஜ்,ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மாற்று வீரர்கள்

மாற்று வீரர்கள்

இதனால், இந்தப் போட்டி நடைபெறுமா என்ற சிக்கல் எழுந்தது. எனினும் மற்ற வீரர்களுக்கு கொரோனா நெகட்டீவ் என்று வந்ததால் திட்டமிட்டப்படி போட்டி நடைபெறும் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. மாற்று வீரர்களாக மாயங் அகர்வால் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பிட்ச் ரிபோர்ட்

பிட்ச் ரிபோர்ட்

அகமதாபாத் ஆடுகளம் ரன் குவிப்பிற்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 11 மாதங்களாக போட்டியே நடைபெறாததால், ஆடுகளம் புதியதாக இருக்கும். இதனால் பேட்டிற்கு பந்து நன்றாக வரும். மேலும் சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் ஆடுகளம் கைக்கொடுக்கும்.

ராகுல் இல்லை

ராகுல் இல்லை

ஆட்டத்தின் பிற்பகுதியில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசுவதே நல்லது. இந்த நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் இடம்பெறவில்லை.இதனால் அவருக்கு பதிலாக இஷான் கிஷன் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடுவரிசையில் ஸ்ரேயாஸ் இல்லாததால் திபக் ஹூடா, வாசிங்டன் சுந்தர் என இருவரும் களமிறங்க வாய்ப்புள்ளது.

Recommended Video

Ind vs WI Mayank Agarwal added to ODI squad after Dhawan, Iyer test Covid positive | Oneindia Tamil
பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

(உத்தேச அணி) 1, ரோகித் சர்மா, 2, இஷான் கிஷன்/மாயங் அகர்வால், 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5, ரிஷப் பண்ட், 6, தீபக் ஹூடா, 7, வாசிங்டன் சுந்தர். 8, ஷர்துல் தாக்கூர். 9, தீபக் சாஹர், 10, முகமது சிராஜ்/பிரஷித் கிருஷ்ணா. 11, சாஹல்/பிஸ்னாய்

(உத்தேச அணி) 1, பிரண்டன் கிங் 2. சாய் ஹோப், 3. டேரன் பிராவோ, 4, புருக்ஸ். 5, நிக்கோலஸ் பூரான், 6. பொலார்ட், 7,ஃபெபியன் ஆலன், 8, போனர் , 9, ஓடியன் ஸ்மித். 10, ஆல்சாரி ஜோசப்.11 கேமர் ரோச்,

Story first published: Friday, February 4, 2022, 10:48 [IST]
Other articles published on Feb 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+