தமிழக வீரருக்கு ஏமாற்றம்.. முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் கொடுத்த ட்விஸ்ட்.. இந்திய ப்ளேயிங் 11 இதோ
அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தமிழக வீரருக்கு ஏமாற்றம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத் மோதிரா மைதானத்தில் தொடங்கியுள்ளது.
ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

ப்ளேயிங் 11 என்ன
கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ப்ளேயிங் 11ல் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஓப்பனிங்கில் கேப்டன் ரோகித் சர்மா அறிவித்தபடி இளம் வீரர் இஷான் கிஷான் களமிறங்கியுள்ளார். மயங்க் அகர்வால் இன்னும் தனது குவாரண்டைன் காலத்தை முடிக்காததால் இஷானுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

மிடில் ஆர்டர் வரிசை
மிடில் ஆர்டரை பொறுத்தவரையில் அனைவரும் எதிர்பார்த்தபடி முதல் விக்கெட்டிற்கு விராட் கோலி, 4வது வீரராக சூர்யகுமார் யாதவ், 5வது வீரராக ரிஷப் பண்ட் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். ஸ்ரேயாஸ் ஐயருக்கு கொரோனா உறுதியானதால் சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஃபினிஷர் யார்
ஆனால் ஃபினிஷிங் ரோலி தான் அனைவருக்கும் ட்விஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக வீரர் ஷாருக்கான் நேற்று அவசர அவசரமாக அணிக்குள் சேர்க்கப்பட்டார். அவர் பவுலிங்கிற்கும் பயன்படுவார் என்பதால் நிச்சயம் ஃபினிஷர் பணிக்காக அவர் வாய்ப்பு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோகித் சர்மா தீபக் ஹூடாவிற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் நல்ல அனுபவம் உள்ள தீபக் ஹூடா தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியுள்ளார்.
Recommended Video

தீபக் சஹார் இல்லை
பவுலிங்கை பொறுத்தவரையில் சுழற்பந்துவீச்சாளர்களாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் யுவேந்திர சாஹல் சேர்க்கப்பட்டுள்ளனர். வேகப்பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூர், பிரஷித் கிருஷ்ணா மற்றும் முகமது சிராஜுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீபக் சஹாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications