For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி.. பிளேயிங் லெவனில் குழப்பம்.. கோலி இடம் யாருக்கு?

டிரிண்டாட்: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வெள்ளிகிழமை இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.

Recommended Video

IND vs WI 1st T20: எப்படி இருக்கும் Predicted Playing 11? | Aanee's Appeal

இந்தப் போட்டியில் சீனியர் வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், அஸ்வின் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.

நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

தொடக்க வீரர் யார்?

தொடக்க வீரர் யார்?

இந்த நிலையில் தொடக்க வீரராக அறிவிக்கப்பட்ட கேஎல் ராகுல் கொரோனா காரணமாக இந்த தொடரில் விளையாடவில்லை, இதனையடுத்து ரோகித் சர்மாவுக்கு ஜோடியாக இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா இல்லை இங்கிலாந்து தொடர் போல் ரிஷப் பண்ட்க்கு ஓப்பனிங் வாய்ப்பு தரப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

விராட் கோலி இடம்

விராட் கோலி இடம்

தற்போது விராட் கோலி இடத்தை நிரப்புவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சொதப்பிய ஸ்ரேயாஸ் ஐயர், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரில் 2 அரைசதம் விளாசி இருக்கிறார். இதனால் அவருக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும்.

நெருக்கடி

நெருக்கடி

கடைசியாக 5 போட்டியில் சொதப்பிய சூர்யகுமார் யாதவ்க்கு இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதே போன்று ஹர்திக் பாண்டியா பிளேயிங் லெவனில் தனது இடத்துக்கு திரும்பி விடுவார். மேலும், தினேஷ் கார்த்திக்கிற்கும் இந்த தொடரில் ரன் குவிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பந்துவீச்சு

பந்துவீச்சு

இதே போன்று ஜடேஜா நாளைய போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அக்சல் பட்டேலுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என தெரிகிறது. சாஹல் ஒரே ஸ்பெஷல் ஸ்பின்னராக அணியில் இருப்பார். வேகப்பந்துவீச்சில் ஹர்ஸ்தீப் சிங்கிற்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் ஹர்சல் பட்டேல்,புவனேஸ்வர் குமார் தங்களத இடத்தை உறுதி செய்து கொள்வார்கள்

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

1, ரோகித் சர்மா, 2, ரிஷப் பண்ட், 3, சூர்யகுமார், 4, ஸ்ரேயாஸ் ஐயர், 5, ஹர்திக் பாண்டியா, 6, தினேஷ் கார்த்திக், 7, ஜடேஜா /அக்சர் பட்டேல். 8, ஹர்சல் பட்டேல், 9, புவனேஸ்வர்குமார். 10. சாஹல், 11, ஆவேஷ் கான் /ஆர்ஸ்தீப் சிங்

Story first published: Thursday, July 28, 2022, 23:33 [IST]
Other articles published on Jul 28, 2022
English summary
India vs West indies 1st t20 – Playing xi and preview இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி.. பிளேயிங் லெவனில் குழப்பம்.. கோலி இடம் யாருக்கு?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+