Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 சீனியர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்.. 2வது ODI க்கான இந்திய அணி ப்ளேயிங் 11.. ரோகித் எடுத்த முடிவு!!

அகமதாபாத்: 2வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இந்த 2வது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1 மணிக்கு அகமதாபாத்தில் தொடங்கவுள்ளது.

இந்திய அணி 1 - 0 என முன்னிலை வகிக்கும் நிலையில் இன்று வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி முயன்று வருகிறது.

ஓப்பனிங் யார்

ஓப்பனிங் யார்

ஆனால் எப்படிபட்ட ப்ளேயிங் 11 உடன் களமிறங்கும் என்பதில் தான் குழப்பம் நீடிக்கிறது. ஓப்பனிங்கில் கடந்த முதல் போட்டியில் விலகியிருந்த துணைக்கேப்டன் கே.எல்.ராகுல் 2வது போட்டிக்கு அணிக்குள் வந்துள்ளார். மற்றொரு புறம் வாய்ப்புகாக காத்திருக்கும் சீனியர் வீரர் மயங்க் அகர்வாலுக்கு ஒரு வாய்ப்பாவது கொடுக்க வேண்டும் என்ற சூழலும் நிலவி வருகிறது. எனினும்

கே.எல்.ராகுல் தான் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.

2 இளம் வீரர்கள்

2 இளம் வீரர்கள்

மிடில் ஆர்டரை பொறுத்தவரையில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் ஆகியோர் விளையாடவுள்ளனர். சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் ஹுடா ஆகியோர் முதல் போட்டியில் தங்களுக்கு கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தியதால், அவர்களை அணிக்குள் தக்கவைக்க முடிவெடுத்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் ஸ்ரேயாஸ் ஐயர் இன்னும் கொரோனாவில் இருந்து மீண்டு வரவில்லை என்பதால் எந்த பிரச்சினையும் இல்லை.

குல்சா ஜோடி

குல்சா ஜோடி

யுவேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஜோடியை பார்க்க வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவியது. கேப்டன் ரோகித் சர்மாவும் அதற்கு ஆசைப்பட்டார். எனினும் அதற்கு இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் முட்டுக்கட்டை போட்டுள்ளார். முதல் போட்டியில் அவர், 30 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இதே போல அவர் லோயர் ஆர்டரில் பேட்டிங்கிலும் அசத்துவார் என்பதால் இந்திய அணி அவரை எடுக்கவே முன்னுரிமை கொடுக்கிறது.

வேகப்பந்துவீச்சு

வேகப்பந்துவீச்சு

வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை ஷர்துல் தாக்கூர் முதல் போட்டியில் சற்று சொதப்பினார். 7 ஓவர்களில் ஒரு விக்கெட்டை கூட எடுக்காமல் 38 ரன்களை விட்டுக்கொடுத்தார். எனவே அவருக்கு பதிலாக இப்போட்டியில் தீபக் சஹாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு புறம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நவ்தீப் சைனி குணமடைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். எனவே அவருக்கு வாய்ப்பு வழங்கவும் அதிக வாய்ப்புள்ளது.

Recommended Video

Virat Kohli நிதானம் இல்லாமல் விளையாடுகிறார்.. Sunil Gavaskar எச்சரிக்கை
இந்திய ப்ளேயிங் 11

இந்திய ப்ளேயிங் 11

ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சஹார்/ நவ்தீப் சைனி, முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா, யுவேந்திர சாஹல்,

Story first published: Wednesday, February 9, 2022, 10:00 [IST]
Other articles published on Feb 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+