Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளம்.. இந்திய அணியில் இருக்கும் குறை.. இன்று பதிலடி தருமா வெஸ்ட் இண்டீஸ்

போர்ட் ஆப் ஸ்பெயின்: இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

Recommended Video

Virat Kohli கொடுத்த அதிரடி பேட்டி! ரசிகர்கள் உற்சாகம் *Cricket

மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

போர்ட் ஆப் ஸ்பைனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

ஆடுகளம்

ஆடுகளம்

இந்த நிலையில் வாழ்வா சாவா என்ற கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது ஆட்டத்தில் களமிறங்குகிறது. இந்த போட்டியும் போர்ட் ஆப் ஸ்பைனில் நடைபெறுகிறது. இன்றைய போட்டிக்கான ஆடுகளம் ரன்குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ் வெல்லும் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்ட்னர்ஷிப்

பார்ட்னர்ஷிப்

ஏனெனில் இரண்டாவது பேட்டிங் செய்யும்போது எவ்வளவு ரன் அடிக்க வேண்டும் என்று தெரிந்துவிடும் என்பதால் இன்னிங்சை கட்டமைத்து விளையாட அது சரியாக இருக்கும். இன்றைய ஆட்டத்தில் தொடக்க வீரர்களின் பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியம் இந்த பை டாப் வரிசை வீரர்கள் அவர்களுக்குள் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் குவிக்க வேண்டியது கட்டாயம்.

இந்தியாவின் குறை

இந்தியாவின் குறை

ஏனெனில் 40 வது ஓவருக்கு பின்னால் ஆடுகளம் சற்று தொய்வாக இருக்கிறது. இதனால் முன்கூட்டியே ரன்கள் அடிக்க வேண்டியது அவசியம். இந்திய அணியை பொறுத்தவரை முதல் 3 வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும், நடுவரிசையில் சாம்சன், தீபக் ஹூடா, சூரியகுமார் யாதவ் ஆகியோர் ரன்கள் குவிக்க வேண்டியது அவசியம். பந்துவீச்சை பொறுத்தவரை பிரசித் கிருஷ்ணா இன்னும் பார்முக்கு திரும்பாதது சற்று ஏமாற்றமாக கருதப்படுகிறது.

 பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

இன்றைய ஆட்டத்திலும் காயம் காரணமாக ஜடேஜா பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.1, ஷிகர் தவான், 2, சுப்மான் கில், 3, சூர்ய குமார் யாதவ், 4, ஸ்ரேயாஸ் ஐயர், 5, சஞ்சு சாம்சன், 6, தீபக் ஹூடா, 7, அக்சர் பட்டேல், 8, சர்துல் தாக்கூர் 9, முகமது சிராஜ், 10, பிரசித் கிருஷ்ணா, 11, சாஹல்

Story first published: Sunday, July 24, 2022, 14:05 [IST]
Other articles published on Jul 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+