For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புஸ்ஸாகிப் போன பந்துவீச்சு.. போட்டியை “டை” செய்த வெ.இண்டீஸ்.. அதிர்ச்சியில் இந்தியா

Recommended Video

இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்ந்தேடுத்து விட்டது-வீடியோ

விசாகப்பட்டணம் : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டணத்தில் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்து ஆடியது. கோலி 157, அம்பதி ராயுடு 73 ரன்கள் அடிக்க இந்தியா 50 ஓவர்களில் 321 ரன்கள் குவித்தது. இதில் கோலி அதிவிரைவாக பத்தாயிரம் ரன்களை கடந்து சர்வதேச அளவில் சச்சினை முந்தியதோடு பல சாதனைகளை முறியடித்தார். அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் ஆடியது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் துவக்க வீரர்களாக போவெல் மற்றும் ஹேமராஜ் களமிறங்கினர். முஹம்மது ஷமி பந்தில் போவெல், ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து குல்தீப் சுழலில் அடுத்தடுத்து ஹேமராஜ் மற்றும் சாமுவேல்ஸ் ஆட்டமிழந்தனர். முதல் போட்டியில் சதம் அடித்து அதிரடி காட்டிய ஹெட்மையர், மீண்டும் ருத்ர தாண்டவம் ஆடி, 7 சிக்ஸர்கள் அடித்து 94 ரன்களில் ஆட்டமிழந்தார். போவெல் 18 ரன்களில் வெளியேற, அடுத்து கேப்டன் ஹோல்டர், ஹோப் இணைந்து சிறப்பாக ஆடினர். ஹோல்டர் 12 ரன்களில் ரன் அவுட் ஆனார். கடைசி ஓவரில் 14 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், வெஸ்ட் இண்டீஸ் 13 ரன்கள் மட்டுமே எடுத்தது. 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்தது. அதனால், போட்டி "டை" ஆனது. கடுமையாக போராடிய வெஸ்ட் இண்டீஸ் டை மூலம் ஆறுதல் அடைந்துள்ளது. கடைசி வரை நின்று ஆடிய ஹோப் 123 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணியிலோ பந்துவீச்சு முற்றிலும் சொதப்பலாக அமைந்தது.

இந்திய அணியில் மாற்றம்

இந்திய அணியில் மாற்றம்

முன்னதாக, இந்த போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டு கலீல் அஹ்மது வெளியேற்றப்பட்டார். முதல் போட்டியில் இந்தியா மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் இரண்டு சுழற்பந்துவீச்சாளர்கள் கொண்டு களம் இறங்கியது. முதல் போட்டியில் இந்தியா பந்துவீச்சில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தது. அதை அடுத்து இரண்டாவது போட்டியில் இந்தியா மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் மற்றும் இரண்டு வேகப் பந்துவீச்சாளர்கள் என்ற வியூகத்துக்கு மாறி உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி மாற்றம்

வெஸ்ட் இண்டீஸ் அணி மாற்றம்

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒரே ஒரு மாற்றமாக முதல் போட்டியில் அறிமுகமான ஒஷேன் தாமஸ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மற்றொரு புதிய வீரர் ஓபேத் மேக்காய் களம் இறங்குகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் போட்டியில் பேட்டிங்கில் கலக்கியது. எனினும், பந்துவீச்சில் கோட்டை விட்டது. இந்த போட்டியில் இரண்டிலும் அந்த அணி ஆதிக்கம் செலுத்தும் பட்சத்தில், இந்தியாவுக்கு தடுமாற்றத்தை கொடுக்க முடியும்.

இந்தியா அணி பேட்டிங்

இந்தியா அணி பேட்டிங்

முன்னதாக இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக தவான், ரோஹித் சர்மா களம் இறங்கினர். முதல் போட்டியில் சதம் அடித்த ரோஹித் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து தவான் நர்ஸ் பந்தில் LBW முறையில் ஆட்டமிழந்தார். கோலி, ராயுடு இணைந்து அணியை வழிநடத்தினர். வலுவான கோலியை வெளியேற்ற முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு திணறியது. ராயுடு சிறப்பாக ஆடி 73 ரன்கள் அடித்து வெளியேறினார். அடுத்து தோனியுடன் இணைந்து ஆடிய கோலி 81 ரன்கள் அடித்த போது அதிவேகமாக 10,000 ரன்களை கடந்த இந்தியர் என்ற சாதனையை செய்தார்.

தோனி ஏமாற்றினார்

தோனி ஏமாற்றினார்

தோனி 20 ரன்களில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றினார். அடுத்து வந்த ரிஷப் பண்ட்டும் 17 ரன்களில் வெளியேறினார். கோலி நிலையாக ஆடி ஆட்டமிழக்காமல் 157 ரன்கள் அடித்தார். 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு, இந்தியா 321 ரன்கள் எடுத்தது.

Story first published: Wednesday, October 24, 2018, 22:16 [IST]
Other articles published on Oct 24, 2018
English summary
India vs West Indies 2nd ODI Live update. India batting first against West Indies.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X