Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்கு காத்திருக்கும் கண்டம்.. அவசரப்பட்டால் தோல்வி உறுதி.. 2வது டி20-ல் ஏற்பட்ட ட்விஸ்ட்!

செயிண்ட் கிட்ஸ்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணிக்கு பெரும் கண்டம் காத்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய அணி ஏற்கனவே ஒரு வெற்றியை பெற்று தொடரில் முன்னிலையில் இருக்கும் சூழலில் 2வது போட்டி இன்று நடைபெறுகிறது.

2வது டி20 போட்டி

2வது டி20 போட்டி

3 ஒருநாள் போட்டிகள் மற்றும் முதல் டி20 போட்டிகள் ட்ரினிட்டாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. ஆனால் 2வது டி20 போட்டி செயிண்ட்ஸ் கிட்ஸ்ஸில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த மைதானத்தில் சூழல் மற்றும் பிட்ச் ஆகியவை முற்றிலும் மாறுபட்டுள்ளது.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

இந்த மைதானத்தில் இதுவரை 10 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 2வது பேட்டிங் செய்த அணிகளுக்கே சாதகமாக உள்ளது. முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் பிட்ச்- குறித்து புரிந்துக்கொள்ள முடியாமல் திணறிவிடுகின்றனர். இதுனாலேயே இது பவுலிங்கிற்கு சாதகமான பிட்ச் ஆகவும், குறைந்த ஸ்கோர் மைதானமாகவும் கருதப்படுகிறது.

வெஸ்ட் இண்டீஸின் கோட்டை

வெஸ்ட் இண்டீஸின் கோட்டை

இந்த மைதானத்தில் இதுவரை ஒருமுறை கூட இந்திய அணி விளையாடியது கிடையாது. மறுபுறம் வெஸ்ட் இண்டீஸ் அணி இதுவரை இங்கு ஆடிய 10 போட்டிகளில் 6 வெற்றிகளையும், 2 தோல்விகளையுமே பெற்று பலமாக உள்ளது. 2 போட்டிகள் ரத்தானது. எனவே வெஸ்ட் இண்டீஸ் அணியை இங்கு சமாளிப்பது கடினமாகும்.

வல்லுநர்கள் எச்சரிக்கை

வல்லுநர்கள் எச்சரிக்கை

இந்த பிட்ச்-ல் முதல் சில நேரங்களுக்கு பேட்ஸ்மேன்கள் பொறுமையுடன் விளையாடி, பின்னர் அதிரடி காட்ட வேண்டும். ஆனால் ரோகித் சர்மாவின் அட்டாக்கிங் ஃபார்முலாவை இங்கு பயன்படுத்தினால் இந்தியா சொற்ப ரன்களுக்கு சுருண்டுவிடும். எனவே அதில் சாதூர்யமாக இருக்க வேண்டும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

வீரர்கள் மாற்றம்

வீரர்கள் மாற்றம்

வார்னர் பார்க் மைதானத்தில் அதிகபட்சமாக 182 ரன்கள் தான் அடிக்கப்பட்டுள்ளது. சராசரியாக இங்கு 120 ரன்கள் மட்டுமே அடிக்க முடியும் என்பதால் இந்தியா தனது பேட்டிங் ஆர்டரை பலப்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக அணியில் ஸ்ரேயாஸ் ஐயரை நீக்கிவிட்டு ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா சேர்க்கப்படவுள்ளார்.

Story first published: Monday, August 1, 2022, 17:27 [IST]
Other articles published on Aug 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+