Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ப்ரித்வி ஷா, ரஹானே, ரிஷப் பண்ட் அரைசதம்.. வெஸ்ட் இண்டீஸ் வேலைக்கே ஆவாது போலயே

Recommended Video

மேற்கு இந்திய தீவுகள் பேட்டிங் அசத்தல், பதிலடி தருமா இந்தியா?- வீடியோ

ஹைதராபாத் : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது.

முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்க்ஸிலும் மிக மோசமாக பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது 300 ரன்களுக்கும் மேல் குவித்துள்ளது.

வெற்றி எளிது இல்லை

வெற்றி எளிது இல்லை

வெற்றி எளிது இல்லை

முதல் டெஸ்டில் இந்தியா எளிதாக ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி அத்தனை எளிதாக இருக்காது என வெஸ்ட் இண்டீஸ் அணி தன் பேட்டிங் மூலம் உணர்த்தி உள்ளது.

முதல் நாள் சேஸ் 98

முதல் நாள் சேஸ் 98

இரண்டாம் டெஸ்டில் நேற்று முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 295 ரன்கள் எடுத்து இருந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. ஏழு விக்கெட் இழந்து இருந்தது. அந்த அணியின் சேஸ் 98 ரன்களும், பிஷூ 2 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் 311 ரன்கள்

வெஸ்ட் இண்டீஸ் 311 ரன்கள்

இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் பிஷூ 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து சேஸ் சதம் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே 10வது விக்கெட்டும் போனது. வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து இரண்டாம் நாளில் வெறும் 6.4 ஓவர்கள் மட்டுமே சந்தித்தது. 311 ரன்கள் அடித்து தன் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கை முடித்துக் கொண்டது வெஸ்ட் இண்டீஸ் அணி. சேஸ் 106, ஜேசன் ஹோல்டர் 52 ரன்கள் எடுத்ததே அந்த அணியின் ரன் குவிப்புக்கு முக்கிய காரணம். வெஸ்ட் இண்டீஸ் 311 ரன்கள் குவித்துள்ள நிலையில், இந்தியா இந்த போட்டியில் எளிதாக வெற்றி பெற முதல் இன்னிங்க்ஸில் 400 அல்லது அதற்கும் மேல் ரன்கள் குவிக்க வேண்டும்.

அடுத்து இந்தியா பேட்டிங்

அடுத்து இந்தியா பேட்டிங்

அடுத்து இந்திய அணி தன் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கை ஆடி வருகிறது. துவக்க வீரர் ராகுல் 25 பந்துகளை சந்தித்து 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு புறம் தன் முதல் போட்டியில் சதம் அடித்து அசத்திய ப்ரித்வி ஷா, அரைசதம் அடித்து 70 ரன்களில் வெளியேறினார். புஜாரா 10, கோலி 45 ரன்களில் வெளியேறினர். அடுத்து ரஹானே 75, ரிஷப் பண்ட் 85 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர். மூன்று இந்திய பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்து போட்டியை இந்தியா வசம் தக்க வைத்துள்ளனர். இரண்டாம் நாளின் இறுதியில், 81 ஓவர்களுக்கு இந்தியா 308 ரன்கள் எடுத்து 4 விக்கெட் இழந்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கில் சற்று முன்னேறிய நிலையில், பந்துவீச்சிலும் சவால் அளிக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அதற்கு மாறாக எந்த தாக்கமும் இன்றி இருக்கிறது வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு.

Story first published: Saturday, October 13, 2018, 18:18 [IST]
Other articles published on Oct 13, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+