For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs WI 2வது டெஸ்ட் - பிட்ச் ரிப்போர்ட்டை பார்த்தவுடன் மேட்ச் ரிசல்ட் தெரிஞ்சு போச்சு

டெல்லி: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று (அக்டோபர் 10) தொடங்குகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது இந்திய அணி. தனது தலைமையில் முதல் உள்நாட்டு டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இருக்கிறார் கேப்டன் சுப்மன் கில். இந்தப் போட்டி நடைபெற உள்ள டெல்லி மைதான பிட்ச் எப்படி இருக்கும்? போட்டி நடைபெற உள்ள நாட்களில் வானிலை எப்படி இருக்கும்? என்று பார்க்கலாம்.

அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, இந்த டெல்லி டெஸ்ட் ஒரு 'வாழ்வா-சாவா' போட்டியாகும். இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வென்றால் தொடரை சமன் செய்யலாம்.

முதல் டெஸ்ட்டில், இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் சுழல் வலையில் சிக்கிச் சிதைந்த வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் வரிசைக்கு, டெல்லி ஆடுகளம் மேலும் ஒரு மிகப்பெரிய அக்னிப் பரீட்சையாக அமையப் போகிறது.

India vs West Indies 2nd Test Pitch report of Delhi cricket stadium and weather report

ஆடுகளம் எப்படி? (Pitch Report)

டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தின் ஆடுகளம், பொதுவாகவே சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமானது. இந்தப் பிட்ச்சின் தன்மைகள் இந்திய அணிக்குச் சாதகமாகவே உள்ளன. போட்டி செல்லச் செல்ல, பந்து நன்றாகத் திரும்பி, பவுன்ஸும் குறைவாக இருக்கும். இதனால், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இது ஒரு சொர்க்கபுரியாக அமையும். முதல் நாள் ஆட்டம் பேட்டிங்கிற்கு ஓரளவு சாதகமாக இருந்தாலும், இரண்டாம் நாளிலிருந்தே சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆடுகளத்தின் தன்மை, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரைக் கொண்ட இந்திய சுழற்பந்து கூட்டணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சுழற்பந்து வீச்சை சந்திப்பதில் சிரமம் உள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு நிச்சயம் சிக்கலை ஏற்படுத்தும்.

வானிலை அறிக்கை (Weather Report)

டெல்லியில் டெஸ்ட் போட்டியின் ஐந்து நாட்களுக்கும் வானிலை சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காலையில் ஆட்டம் தொடங்கும் போது வானம் தெளிவாகவும், சூரிய ஒளியுடனும் காணப்படும். மழை குறுக்கிட வாய்ப்பில்லை என்பதால், ஐந்து நாட்களும் முழுமையான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.

இரு அணிகளின் வீரர்கள் விவரம்

இந்திய அணி உத்தேச பிளேயிங் 11:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜுரல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா / பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ்.

வெஸ்ட் இண்டீஸ் அணி உத்தேச பிளேயிங் 11:

ஜான் கேம்ப்பெல், டேகனரைன் சந்தர்பால், அலிக் அதானேஸ், பிராண்டன் கிங், ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), ஜஸ்டின் கிரேவ்ஸ், காரி பியர், ஜோஹன் லெய்ன், ஆண்டர்சன் பிலிப், ஜேடன் சீல்ஸ்

Story first published: Friday, October 10, 2025, 7:41 [IST]
Other articles published on Oct 10, 2025
English summary
India vs West Indies 2nd Test Pitch report of Delhi cricket stadium and weather report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+