Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு செம அடி.. எங்களை குறைச்சு எடை போட்டது தப்பு.. பாடம் எடுத்த வெ.இண்டீஸ்

Recommended Video

இன்றைய போட்டியிலும் இந்தியாவை விளாசிய வெஸ்ட் இண்டீஸ்- வீடியோ

புனே : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று (அக்டோபர் 27) நடைபெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாம் போட்டி டை ஆனது. இதையடுத்து மூன்றாம் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெறும் முனைப்பில் களம் இறங்கியது.

இந்திய அணியில் புவனேஸ்வர் குமார், பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பியதை அடுத்து இந்தியா பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்டது.

அணி மாற்றங்கள்

அணி மாற்றங்கள்

இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. கலீல் அஹ்மது, பும்ரா, புவனேஸ்வர் குமார் வேகப் பந்துவீச்சுக்கும், சாஹல், குல்தீப் சுழல் பந்துவீச்சுக்கும் அணியில் இடம் பெற்றனர். உமேஷ் யாதவ், ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியில் மேலும் ஒரு புதிய வீரர் அறிமுகமானார். மூன்று ஒருநாள் போட்டிகளில் இதுவரை நான்கு வீரர்களை அறிமுகம் செய்து விட்டது வெஸ்ட் இண்டீஸ் அணி. தேவேந்திர பிஷூவுக்கு பதில் ஃபாபியன் ஆலன் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக அணியில் இடம் பிடித்தார்.

அணி வீரர்கள் விவரம்

அணி வீரர்கள் விவரம்

இந்திய அணி - ரோஹித் சர்மா, தவான், கோலி, அம்பதி ராயுடு, தோனி, ரிஷப் பண்ட், புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், சாஹல், கலீல் அஹ்மது, பும்ரா

வெஸ்ட் இண்டீஸ் அணி - கீரன் போவெல், சந்திரபால் ஹேமராஜ், ஷாய் ஹோப், மர்லான் சாமுவேல்ஸ், ஷிம்ரோன் ஹெட்மையர், ரோவ்மன் போவெல், ஜேசன் ஹோல்டர், ஃபாபியன் ஆலன், ஆஷ்லே நர்ஸ், கீமர் ரோச், மேக்காய்

வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்

வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்

டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் போவெல், ஹேமராஜ் துவக்க வீரர்களாக களம் இறங்கினர். ஹேமராஜ் 15, போவெல் 21, சாமுவேல்ஸ் 9, ஹெட்மையர் 37, ரோவ்மன் 4, கேப்டன் ஜேசன் ஹோல்டர் 32, ஃபாபியன் 5, ஹோப் 95, நர்ஸ் 40, ரோச் 15 ரன்கள் அடித்தனர். 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 283 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்து தன் இன்னிங்க்சை முடித்துக் கொண்டது.

இந்திய பந்துவீச்சு எப்படி?

இந்திய பந்துவீச்சு எப்படி?

பும்ரா 4, குல்தீப் 2, கலீல் அஹ்மது, புவனேஸ்வர் குமார், சாஹல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். முன்னணி பந்துவீச்சாளர் என கூறப்படும் புவனேஸ்வர் குமார் தான் இன்று அதிக ரன்கள் கொடுத்தார். அவர் 10 ஓவர்களில் 70 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தார். அவர் வீசிய 49வது ஓவரில் மட்டும் 21 ரன்கள் அடிக்கப்பட்டது.

இந்தியா சொதப்பல் பேட்டிங்

இந்தியா சொதப்பல் பேட்டிங்

அடுத்து 284 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 8, தவான் 35, ராயுடு 22, ரிஷப் பண்ட் 24, தோனி 7, புவனேஸ்வர் குமார் 10 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி ஏற்படுத்தினர். கோலி தனி ஆளாக ஆடி 42வது ஓவரில் 107 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். தோல்வி உறுதியான நிலையில் கடைசியாக குல்தீப் தன்னால் முடிந்த அளவு ரன் எடுத்தார். எனினும், இந்தியா 47.4 ஓவர்களில், 240 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தன் போராட்டத்துக்கான பலனாக முதல் வெற்றியை பெற்று, தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.

Story first published: Saturday, October 27, 2018, 21:37 [IST]
Other articles published on Oct 27, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+