For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வாழ்வா? சாவா கட்டத்தில் இந்திய அணி? பிளேயிங் லெவனில் மாற்றம்.. ஆடுகளம் எப்படி? மழை குறுக்கிடுமா?

தரோபா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நாளை இந்திய அணி பலப் பரிட்சை நடத்துகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் கடைசி போட்டியில் வெல்லும் அணியே கோப்பையை கைப்பற்றும்.

இதனால் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி ஒருமுறை கூட வெஸ்ட் இண்டீஸ்யிடம் ஒரு நாள் தொடரை இழந்தது இல்லை.

India vs west indies 3rd odi preview and pitch condition - weather report

இந்த சோகமான சாதனையை மாற்றும் நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் உள்ளனர். இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இடம் பெறாதது இந்திய அணிக்கு மைனஸ் பாயிண்டாக இருந்தது. இதனால் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருவரும் பிளேயிங் லெவனில் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நாளைய ஆட்டத்தில் யார் இடம் பெறுவார்? யார் அணியை விட்டு செல்வார் என்று தெரிந்துகொள்ள ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

சஞ்சு சாம்சன் தமக்கு கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டதால் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் இடம்பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் சஞ்சு சாம்சன் அக்சர்பட்டேல் நீக்கப்பட்டு ரோகித் சர்மாவும் விராட் கோலியும் இந்திய அணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளம் மிகவும் தோய்வாகவும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவும் செயல்படுகிறது.

இதன் காரணமாக நாளை ஆட்டத்தில் டாஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது ஒருநாள் போட்டி தற்போது தரோபாவில் உள்ள பிரைன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது. செவ்வாய்க்கிழமை மீண்டும் மழை பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆட்டம் தடைப்படவும் வாய்ப்பு இருக்கிறது. ஆசியக் கோப்பை போட்டிகளுக்கு முன் இந்தியா விளையாடப் போகும் கடைசி ஒரு நாள் போட்டி இது என்பதால் வெற்றியுடன் தொடரை முடிக்க ரோகித் படை தயாராகி வருகிறது.இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தும் உம்ரான் மாலிக் தனது திறமையை வெளிப்படுத்தாமல் இருப்பது ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது.

Story first published: Monday, July 31, 2023, 17:31 [IST]
Other articles published on Jul 31, 2023
English summary
India vs west indies 3rd odi preview and pitch condition - weather report வாழ்வா? சாவா கட்டத்தில் இந்திய அணி? பிளேயிங் லெவனில் மாற்றம்.. ஆடுகளம் எப்படி? மழை குறுக்கிடுமா?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+