For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெ.இண்டீஸ்-க்கு மரண அடி கொடுத்து வென்ற இந்தியா.. ரோஹித், ராயுடு சதம்.. கலீல் அபாரம்

மும்பை : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன நான்காவது ஒருநாள் போட்டி மும்பையில் நடைபெற்றது.

முதல் மூன்று போட்டிகள் முடிவில் இரு அணிகளும் 1-1 என ஒருநாள் தொடரில் சமநிலையில் இருந்தன. எனவே, தொடரில் முன்னிலை பெற இரு அணிகளும் முனைப்புடன் இருந்தன.

முதல் போட்டியை இந்தியா வென்றது. இரண்டாம் போட்டி டை ஆனது. மூன்றாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்று இந்தியாவிற்கு அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில் நான்காம் போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் என்ற இக்கட்டான சூழலில் இந்தியா இருந்தது.

இரு அணிகளில் மாற்றங்கள்

இரு அணிகளில் மாற்றங்கள்

இந்திய அணியில் முக்கிய மாற்றமாக ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு கேதார் ஜாதவும், சாஹலுக்கு பதில் ஜடேஜாவும் அணியில் சேர்க்கப்பட்டனர். இந்த தொடரில் ரிஷப் பண்ட் தனக்கு கிடைத்த பேட்டிங் வாய்ப்பில் சரியாக ரன் குவிக்கவில்லை. இந்தியா மூன்று வேகம், இரண்டு சுழல், ஒரு பகுதி நேர சுழல் பந்துவீச்சாளர் என்ற வியூகத்தோடு களம் இறங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஓபேத் மெக்காய்-க்கு பதில் கீமோ பால் அணியில் சேர்க்கப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை இந்த தொடர் முழுவதுமே அதிக அனுபவமற்ற வீரர்களை வைத்துக் கொண்டு சமாளித்து வருகிறது. அது இந்த போட்டியிலும் தொடர்ந்தது.

அணி வீரர்கள் விவரம்

அணி வீரர்கள் விவரம்

இந்திய அணி - ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, அம்பதி ராயுடு, தோனி, கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், கலீல் அஹ்மது, பும்ரா

வெஸ்ட் இண்டீஸ் அணி - கீரன் போவெல், சந்திரபால் ஹேமராஜ், ஷாய் ஹோப், மர்லான் சாமுவேல்ஸ், ஷிம்ரோன் ஹெட்மையர், ரோவ்மன் போவெல், ஜேசன் ஹோல்டர், ஃபாபியன் ஆலன், ஆஷ்லே நர்ஸ், கீமர் ரோச், கீமோ பால்

கோலி ஏமாற்றினார்

கோலி ஏமாற்றினார்

இந்த போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு ரோஹித், தவான் துவக்கம் அளித்தனர். அதிரடியாக 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்த தவான் 40 பந்துகளில் 38 ரன்கள் அடித்து கீமோ பால் பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த கோலி 16 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். ஏற்கனவே மூன்று போட்டிகளில் தொடர்ந்து சதம் அடித்து இருந்த கோலி, இன்று தொடர்ந்து நான்காவது சதத்தை அடித்து இருந்தால், புதிய சாதனை படைத்திருப்பார். அந்த வாய்ப்பை நழுவ விட்டார் அவர்.

ரோஹித், ராயுடு அசத்தல் சதம்

ரோஹித், ராயுடு அசத்தல் சதம்

அடுத்து ராயுடு, ரோஹித்துக்கு ஒத்துழைப்பு அளிக்க, ரோஹித் சதம் அடித்தார். இவர்கள் கூட்டணி 211 ரன்களை எட்டிய போது ரோஹித் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ராயுடு சரியாக சதம் அடித்த பின்னர் ரன் அவுட் ஆனார். அடுத்து தோனி 23 ரன்களில் ஆட்டமிழந்து மீண்டும் ஒருமுறை பேட்டிங்கில் சொதப்பினார். இறுதியில் ஜாதவ், ஜடேஜா ஓரளவு ரன் எடுக்க இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 377 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு மோசமாகவே இருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்

வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்

378 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடத் துவங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி. அந்த அணிக்கு ஹேமராஜ், போவெல் துவக்கம் அளித்தனர். ஹேமராஜ், புவனேஸ்வர் குமார் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் நம்பிக்கை நாயகன் ஹோப் மற்றும் துவக்க வீரர் போவெல் இருவரும் ரன் அவுட் ஆயினர். அடுத்து கலீல் அஹ்மது பந்துவீச்சில் ஹெட்மையர், ரோவ்மன் போவெல், சாமுவேல்ஸ் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணி சரிவுப் பாதையில் செல்லத் துவங்கியது. கேப்டன் ஜேசன் ஹோல்டர் மட்டும் ஒருபுறம் நிலைத்து ஆடி அரைசதம் கடந்தார். அதே சமயம், மற்ற வீரர்கள் தொடர்ந்து ஆட்டமிழக்க 36.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா 224 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்தது.

Story first published: Monday, October 29, 2018, 20:48 [IST]
Other articles published on Oct 29, 2018
English summary
India vs West Indies 4th ODI - Live score update in tamil
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X