Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சும்மா வந்தா 1000.. ஐடி கார்டோட வந்தா 500.. இப்படி சொல்லி 30000 டிக்கெட் விற்ற கேரளா

திருவனந்தபுரம்: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மோதும் ஐந்தாவது ஒருநாள் போட்டி கேரளா மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.

இதற்கான டிக்கெட் விற்பனையை அதிரடியாக நடத்தி வருகிறது கேரளா மாநில கிரிக்கெட் அமைப்பு.

மொத்தம் 45,000 டிக்கெட்கள் விற்பனைக்கு இருந்த நிலையில், சுமார் 30,000 டிக்கெட்களை விற்றுத் தீர்த்துள்ளது கேரளா.

டிக்கெட் விலை ஆயிரம் ரூபாய்

டிக்கெட் விலை ஆயிரம் ரூபாய்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஐந்தாவது ஒருநாள் போட்டி நவம்பர் 1 அன்று நடைபெற உள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெறும் அந்த போட்டிக்கான டிக்கெட் விலை ஆயிரம் ரூபாய் ஆகும்.

மாணவர்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி

மாணவர்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி

மாணவர்களுக்கு மட்டும் 50 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மாணவர்கள் தங்கள் கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை எடுத்து வந்தால் ஆயிரம் ரூபாய் டிக்கெட்டை ஐந்நூறு ரூபாய்க்கே பெற்றுக் கொள்ளலாம்.

அனைத்தும் விற்று விடும்

அனைத்தும் விற்று விடும்

இந்த திட்டத்தால் சுமார் 30,000 டிக்கெட்களை எளிதாக விற்றுள்ளது கேரளா மாநில கிரிக்கெட். மீதம் உள்ள 15,000 டிக்கெட்களும் போட்டி துவங்கும் முன்னர் விற்று விடும் என நம்பிக்கையோடு கூறியுள்ளனர் கேரள கிரிக்கெட் நிர்வாகிகள்.

வெ.இண்டீஸ் தொடருக்கு எதிர்பார்ப்பு இல்லை

வெ.இண்டீஸ் தொடருக்கு எதிர்பார்ப்பு இல்லை

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஆடும் போட்டிக்கு ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பு இல்லை. வெஸ்ட் இண்டீஸ் வலுவில்லாத அணி என துவக்கத்தில் அனைவரும் நினைத்ததால், டிக்கெட்கள் விற்பனை மந்தமாகவே இருந்தது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி தன் போராட்டத்தால் ஒரு போட்டியை டை செய்தும், ஒரு போட்டியை வென்றும் உள்ளது. எனினும், இந்தியா ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என முன்னிலையில் உள்ளது. கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா வெல்லும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும். வெஸ்ட் இண்டீஸ் வென்றால் தொடர் சமனாகி விடும். இதனால், இந்த தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதை பயன்படுத்தி, சலுகை விலையில் டிக்கெட்களை விற்று அனைத்து டிக்கெட்களையும் விற்று விட முடிவு செய்துள்ளது கேரளா கிரிக்கெட்.

Story first published: Wednesday, October 31, 2018, 16:30 [IST]
Other articles published on Oct 31, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+