Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஓப்பனிங் வீரராக ரிஷப் பண்ட்” வெஸ்ட் இண்டீஸ் தொடரில் புது முயற்சி..அகர்க்கூர் கூறிய சுவாரஸ்ய காரணம்

அகமதாபாத்: இந்திய அணியின் ஓப்பனிங் வீரராக ரிஷப் பண்ட்-ஐ களமிறக்க வேண்டும் என முன்னாள் வீரர் அஜித் அக்ரேக்கர் வித்தியாசமான யோசனையை கொடுத்துள்ளார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை மதியம் அகமதாபாத்தில் தொடங்குகிறது.

இதற்காக இந்திய அணி தனது கடைசி கட்ட திட்டப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவின் மிடில் ஆர்டர் பிரச்சினைக்காக ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

என்ன பிரச்சினை

என்ன பிரச்சினை

மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட் அடிக்கடி சொதப்புவதால், இனி கே.எல்.ராலுலை மிடில் ஆர்டரில் களமிறக்க வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகிறது. ஏனென்றால் ராகுலின் பலமே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக செயல்படுவது தான். கடந்த 2020ம் ஆண்டில் இருந்து இதுவரை 10 போட்டிகளில் மிடில் ஆர்டரில் விளையாடியுள்ள கே.எல்.ராகுல் 69.25 என்ற சராசரியுடன் 554 ரன்கள் குவித்துள்ளார். இதில் 4 அரைசதங்கள் அடங்கும்.

ராகுலின் சொதப்பல்கள்

ராகுலின் சொதப்பல்கள்

ஆனால் இந்திய அணி தொடர்ந்து கே.எல்.ராகுலை ஓப்பனிங் வீரராக களமிறக்கி வருகிறது. இதனால் அவர் சற்று தடுமாறுகிறார். தென்னாப்பிரிக்க தொடரில் கூட கே.எல். ராகுலால் சிறப்பாக செயல்படமுடியவில்லை. இது ஒருபுறம் இருக்க மிடில் ஆர்டரும் தொடர்ந்து சொதப்பி வருகிறது. மிடில் ஆர்டர் பிரச்சினை தான் தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி தோற்றதற்கு முக்கிய காரணமாகும்.

அகர்க்கர் வழங்கிய யோசனை

அகர்க்கர் வழங்கிய யோசனை

இந்நிலையில் முன்னாள் வீரர் அஜித் அகர்க்கர் சூப்பர் யோசனை ஒன்றை கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், கே.எல்.ராகுல் ஓப்பனரா அல்லது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனா என்பதை முதலில் முடிவு செய்யுங்க. பலமான மிடில் ஆர்டர் வீரர் ஒருவர், ஓப்பனராக களமிறங்கி சொதப்புவது ஏமாற்றமாக உள்ளது. ஓப்பனிங்கிற்கு வேறு ஒருவரை நியமித்துக் கொள்ளலாம்.

ஓப்பனராக பண்ட்

ஓப்பனராக பண்ட்

இந்திய அணியில் அதிரடிக்காட்டக்கூடிய வீரர்கள் உள்ளனர். இஷான் கிஷான், ரிஷப் பண்ட் ஆகியோர் முதல் பந்து முதலே அதிரடிக்காட்டுவார்கள். அவர்களை ஓப்பனிங்கிற்கு களமிறக்கினால் பவர் ப்ளே ஓவர்களில் இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் கொடுக்கும். டாப் ஆர்டரில் ரிஷப் பண்ட் களமிறங்குவதால் இந்தியாவின் எதிர்காலத்திற்கும் நன்றாக அமையலாம் என அஜித் அகர்க்கர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

5 unexpected records in Cricket History | Sachin breaks Shoaib Record! | OneIndia Tamil
பண்ட்-க்கு ஆபத்து

பண்ட்-க்கு ஆபத்து

ரிஷப் பண்ட் மீது தற்போது பல விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. ஓப்பனிங்கிற்கு ஷிகர் தவான் கம்பேக் கொடுத்து வருகிறார். இதனால் கே.எல்.ராகுல் தானாக மிடில் ஆர்டரில் களமிறங்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால் ரிஷப் பண்ட்-ன் இடத்திற்கு ஆபத்து வந்துள்ளது. இதனை இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர் உறுதிப்படுத்தும்.

Story first published: Saturday, February 5, 2022, 13:46 [IST]
Other articles published on Feb 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+