ஒரு இடத்துக்கு அடித்துக்கொள்ளும் 3 பேர்.. இந்திய ப்ளேயிங் 11ல் புதிய திருப்பம்.. சங்கடத்தில் ரோகித்
அகமதாபாத்: 2வது ஒருநாள் போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11ல், பிசிசிஐ திடீரென புதிய குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று மதியம் அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால், இந்திய அணி தொடரை வென்றுவிடும் என்பதால் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய அணி ப்ளேயிங் 11
இந்திய அணி வீரர்களுக்கு கொரோனா உறுதியாகியிருந்ததால், ஒருநாள் அணியில் ஓப்பனிங்கிற்கு மயங்க் அகர்வாலும், இஷான் கிஷனும் கொண்டு வரப்பட்டனர். ஆனால் 2வது போட்டிக்கு கே.எல்.ராகுல் அணிக்குள் வந்துவிட்டதால், மீண்டும் மயங்க் அகர்வால் வாய்ப்பு கிடைக்காமல் உட்காரவைக்கப்பட்டுள்ளார்.

பிசிசிஐ ட்விஸ்ட்
இந்நிலையில் பிசிசிஐ ட்விஸ்ட் கொடுத்துள்ளது. அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், நவ்தீப் சைனி ஆகியோர் குணமடைந்து வந்துவிட்டனர். அவர்கள் அணி வீரர்களுடன் சேர்ந்து பயிற்சி மேற்கொண்டு வரும் வீடியோவும் வெளியாகியுள்ளது. இதனால் ப்ளேயிங் 11-லிலும் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சங்கடத்தில் ரோகித்
தென்னாப்பிரிக்க தொடரில் 3 ஒருநாள் போட்டிகளில் 2 அரைசதம் அடித்து அசத்தியிருந்தார் ஷிகர் தவான். அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் போவதற்கு எந்த காரணமும் ரோகித்திடம் இல்லை. இதே போல மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக தான் சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டிருந்தார். முதல் போட்டியில் அவர் சிறப்பாக விளையாடியதால் யாரை இந்த முறை தேர்வு செய்வார்கள் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
Recommended Video

பவுலிங் குழப்பம்
இது ஒருபுறம் இருக்க கொரோனாவில் இருந்து மீண்ட நவ்தீப் சைனியும் ஃபுல் ஃபார்மில் இருக்கிறார். அவரின் மீது ரோகித் சர்மா அதீத நம்பிக்கை வைத்திருப்பதால் பவுலிங்கிலும் ஒரு வீரர் வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படி இருந்தாலும். இன்று காலை நடைபெறும் உடற்தகுதி தேர்வின் முடிவை வைத்தே இந்திய அணியின் ப்ளேயிங் 11 தேர்வு இருக்கும்.


Click it and Unblock the Notifications