Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபிட்னஸ் இல்லனு சொன்னவங்க வாங்கப்பா??.. முதல் டி20ல் ரோகித் எடுத்த ரிஸ்க்.. வாயைப் பிளந்த ரசிகர்கள்!

கொல்கத்தா: ஃபிட்னஸ் குறித்து கிண்டலடித்தவர்களுக்கு கேப்டன் ரோகித் சர்மா தனது மிரட்டலான கேட்ச் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

கூல் கேப்டன் ரோகித்

கூல் கேப்டன் ரோகித்

ஒருநாள் கிரிக்கெட் தொடரின் போது மிகவும் கண்டிப்புடன் கோபமாக சுற்றி வந்தார் கேப்டன் ரோகித் சர்மா. பிரஷித் கிருஷ்ணா, யுவேந்திர சாஹல் ஆகியோரையெல்லாம் அவர் கேவலமாக திட்டிய ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. ஆனால் இன்று நடைபெற்ற டி20 போட்டியில் முற்றிலும் கூல் கேப்டனாக ரோகித் தென்பட்டார். வீரர்கள் தவறு செய்த போது கூட சிரித்துக்கொண்டே ஜாலியாக கேப்டன்சி செய்து வந்தது ரசிகர்களை கவர்ந்தது.

ஃபிட்னஸ் பிரச்சினை

ஃபிட்னஸ் பிரச்சினை

இதே போல தன்மீதான ஃபிட்னஸ் விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார். ஆட்டத்தின் 20 ஓவரில் ஹர்ஷல் பட்டேல் வீசிய கடைசி பந்தை ஒடியன் ஸ்மித் சிக்ஸருக்கு தூக்கி விளாசினார். ஆனால் அது பெரியளவில் தூரம் செல்லவில்லை. மிட் ஆஃப் திசைக்கு வந்த பந்தை கேட்ச் பிடிக்க லாக் ஆஃப் திசையில் இருந்து ஓடி வந்தார். ஆனால் அவருக்கு முன்னதாகவே ரோகித் சர்மா எக்ஸ்ட்ரா கவர் திசையில் இருந்து ஓடிவந்துவிட்டார்

Recommended Video

Rohit Sharma Explains Why Shreyas Iyer Left Out Of Playing XI? | Oneindi Tamil
அட்டகாச கேட்ச்

அட்டகாச கேட்ச்

பந்திற்கு துளியும் சம்மந்தம் இன்றி வேறு திசையில் இருந்து வந்த ரோகித் சர்மா, ரன்னிங்கிலேயே கேட்ச் பிடித்து கீழே விழுந்து புரண்டார். ஆனால் அது சூர்யகுமார் வந்து பிடித்திருக்க வேண்டிய சுலபமான கேட்சாகும். இதுமட்டுமின்றி அது ஆட்டத்தின் கடைசி பந்து என்பதால் கூடுதலாக இன்னொரு 2 ரன்கள் போயிருக்கும். எனினும் அதனை கூட சேமிக்க வேண்டும் என நினைத்து சிரமப்பட்டு பிடித்தார்.

குவிந்த விமர்சனங்கள்

இதே ரோகித் சர்மா தான் குண்டாக இருக்கிறார்? அவருக்கெல்லாம் என்ன ஃபிட்னஸ் இருக்கிறது?, டெஸ்ட் கேப்டனாக நியமிக்கக்கூடாது என விமர்சனங்கள் குவிந்தன. ஆனால் இதன் மூலம் ரோகித் சர்மாவின் ஃபிட்னஸ் எப்படி உள்ளது என்பதை அனைவரும் புரிந்துக்கொண்டனர்.

Story first published: Wednesday, February 16, 2022, 22:26 [IST]
Other articles published on Feb 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+