Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இப்ப என்ன நடந்தது”.. ரோகித் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச் ..அடுத்த பாலில் விக்கெட்.. எதிரணி வீரர் புலம்பல்

அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸுக்கு போட்டியில் ரோகித் சர்மா செய்த ஃபீல்ட் செட்டிங்கால், எதிரணி வீரர் எப்படி விக்கெட் வீழ்ந்தது என்றே புரியாமல் திகைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இரு அணிகளும் மோதி வரும் முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, ரோகித்தின் சிறப்பான கேப்டன்சியால் 176 ரன்களுக்குள் 10 விக்கெட்டுகளை இழந்தது.

கவனம் பெற்ற கேப்டன்சி

கவனம் பெற்ற கேப்டன்சி

வெஸ்ட் இண்டீஸுன் பேட்டிங் வரிசை மிகவும் பலமானது. கடைசி வரிசை பேட்ஸ்மேன் கூட அதிரடி காட்டும் வகையில் அமைந்திருக்கும். அப்படி இருக்கையில் ஒவ்வொரு ஓவரின் போதும், பேட்ஸ்மேனின் நகர்வுகளை புரிந்துக்கொண்டு ஃபீல்ட் செட்டிங் செய்து ரோகித் சர்மா விக்கெட்டுகளை அள்ளினார். இதில் ப்ரெண்டன் கிங்கின் விக்கெட் தான் தனி கவனம் ஈர்த்துள்ளது.

மாஸ்டர் ஸ்கெட்ச்

மாஸ்டர் ஸ்கெட்ச்

ஆட்டத்தின் 12வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். அதில் முதல் பந்தில் டேரன் பிராவோ சிங்கிள் அடிக்கும் போது ஸ்கொயர் லெக் மற்றும் மிட் விக்கெட் திசையில் ஃபீல்டர்கள் இல்லை. ஆனால் 2வது பந்தில் ப்ரெண்டன் கிங் பேட்டிங்கிற்கு வந்த போது அவரின் உடல்மொழி சிங்கிள் ஆடப்போகிறார் என புரிந்துக்கொண்டு ரோகித் உடனடியாக ஃபீல்ட் செட்டிங்கை மாற்றினார். அதாவது பேட்ஸ்மேனுக்கு அருகில் இருக்கும் மிட் விக்கெட் மற்றும் ஸ்கொயர் லெக் திசையில் வீரர்களை நிற்கவைத்தார்.

திகைத்துப்போன எதிரணி வீரர்

அவர் நிற்கவைத்தப்பின் வாஷிங்டனிடம் ஸ்லோவர் பந்து போடக்கூறியுள்ளார். அதன்படி 2வது பந்தை ரோகித் நினைத்தது போலவே ப்ரெண்டன் லெக் திசையில் சிங்கிள் அடிக்க முற்பட்டார். பந்து வழக்கமான வேகத்தில் வரும் என நினைத்து அவர் பேட்டை சுழற்ற, வாஷிங்டன் சுந்தர் போட்ட ஸ்லோஃபர் பந்து எட்ஜாகி சரியாக மிட் விக்கெட் திசையில் நின்றிருந்த சூர்யகுமார் யாதவின் கையில் சிக்கியது. தனது விக்கெட் எப்படி விழுந்தது என்று புரியாமல் திகைத்துப்போய் நின்றார்.

உதவிய கோலி

உதவிய கோலி

ரோகித் சர்மாவின் இந்த வியூகத்திற்கு பின்னால் விராட் கோலியும் பக்கபலமாய் இருந்தார். பந்துவீசுவதற்கு முன்னதாக ரோகித்தின் ஃபீல்ட் செட்டிங் சரியாக உள்ளதா என பல முறை சரிபார்த்து அவரிடம் ஓகே வா என்றுக் கேட்டார். மேற்கூறிய மொத்த விஷயங்களும் வீடியோவாக இணையத்தில் ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

Story first published: Monday, February 7, 2022, 0:06 [IST]
Other articles published on Feb 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+