'டிக்ளேர்' செய்யச் சொல்லிக் கத்திய ரசிகர்கள்- 495 ரன்களில் 'ஆல் அவுட்' ஆன இந்தியா!
மும்பை: இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 495 ரன்களை எட்டியபோது, மும்பை ரசிகர்கள் டிக்ளேர் செய்யச் சொல்லி கத்திக் கூச்சல் போட்டனர். இதையடுத்து உடனே இந்தியா தனது கடைசி விக்கெட்டையும் இழந்தது.
இந்தியா தற்போது 313 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தற்போது மேற்கு இந்தியத் தீவுகள் அணி தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளது.
இன்றைய ஆட்டத்தில் இரண்டு சதங்களை இந்தியர்கள் போட்டனர். முதலில் போட்டவர் சட்டேஸ்வர் புஜாரா, அவர் 113 ரன்கள் குவித்தார். அடுத்து ரோஹித் சர்மா 111 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முதல் நாள் முடிவில் 157 ரன்கள்
நேற்று ஆட்ட நேர முடிவில் இந்தியா 157 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 34 ரன்களுடனும் சச்சின் டெண்டுல்கர் 38 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

74 ரன்களில் சச்சின் அவுட்
இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் 74 ரன்கள் எடுத்த நிலையில் தியோனரைன் பந்தில் சமியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது இந்திய அணி 221 ரன்களை எடுத்திருந்தது.

57 ரன்களில் கோஹ்லி அவுட்
பின்னர் களமிறங்கிய கோஹ்லி- புஜாரா ஜோடி ரன்களை விறுவிறுவென குவித்தது. கோஹ்லி அரைசதம் கடந்த நிலையில் 78 பந்துகளில் 57 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இந்திய அணியின் ஸ்கோர் 4 விக்கெட் இழப்புக்கு 315ஆக இருந்தது.

சதமடித்த புஜாரா
புஜராவுடன் தமது அறிமுக டெஸ்ட் போட்டியில் இரட்டை சதத்தை நெருங்கிய அசரவைத்த ரோஹித் சர்மா இணைந்து கொண்டார். புஜாரா சதமடித்து 117 ரன்களை எட்டிய நிலையில் ஷில்லிங்போர்ட் பந்தில் அவுட் ஆனார். இதில் 12 பவுண்டரிகள் அடங்கும். மொத்தம் 167 பந்துகளை எதிர்கொண்டார் அவர். இந்திய அணியின் ஸ்கோர்ட் 5 விக்கெட் இழப்புக்கு 354 ஆக இருந்தது.

4 ரன்கள் மட்டுமே எடுத்த டோணி
கேப்டன் டோணி 4 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 365 ரன்கள்.

495 ரன்களுக்கு ஆல் அவுட்
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை 495 ரன்களுக்கு இழந்தது.


Click it and Unblock the Notifications