For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணிக்கு புதிய ஃபினிஷர்.. இளம் வீரரை அறிமுகம் செய்யும் ரோகித் சர்மா.. ஐபிஎல் மூலம் அடித்த லக்!

அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடருக்காக இந்திய அணியில் கூடுதலாக மேலும் ஒரு வீரர் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் முதல் தொடங்கவுள்ளது.

இதற்காக வீரர்கள் அகமதாபாத்திற்கு பயணம் செய்த நிலையில், இந்திய அணிக்குள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.

முதல் போட்டி

முதல் போட்டி

இந்திய அணியின் ஓப்பனிங் வீரர்கள் ஷிகர் தவான், ருதுராஜ் கெயிக்வாட் ஆகியோருக்கும், ஸ்ரேயாஸ் ஐயர், நவ்தீப் சைனி, அக்‌ஷர் பட்டேல் ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ஓப்பனிங்கிற்கு மாற்று வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் இஷான் கிஷான் சேர்க்கப்பட்டனர்.

ரோகித்தின் முடிவு

ரோகித்தின் முடிவு

மயங்க் அகர்வால் 3 நாட்கள் குவாரண்டைனை முடித்துவிட்டு எந்தவித பயிற்சிகளும் இன்று நேரடியாக போட்டிக்கு வரவுள்ளார். எனவே ரிஸ்க் எடுக்க விரும்பாத ரோகித் சர்மா, ஏற்கனவே டி20 அணி பபுளில் இருக்கும் இஷான் கிஷானை ஓப்பனிங் ஜோடியாக வைத்துக்கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

கூடுதல் வீரர்

கூடுதல் வீரர்

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு வீரர் வரவழைக்கப்பட்டுள்ளார். மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர் இல்லை என்பதால், அவருக்கு மாற்று வீரராக தீபக் ஹூடாவை பிசிசிஐ கொண்டு வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய தீபக் ஹூடா முதல் முறையாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகவுள்ளார்.

ஸ்பெஷல் பொறுப்பு

ஸ்பெஷல் பொறுப்பு

இதனையடுத்து மிடில் ஆர்டரில் முதல் விக்கெட்டிற்கு விராட் கோலி, 4வது வீரராக சூர்யகுமார் யாதவ், 5வது வீரராக ரிஷப் பண்ட் களமிறங்குவார்கள். இவர்களுக்கு பின்னர் ஃபினிஷர் பணிக்காகவும் ஆல்ரவுண்டராகவும் தீபக் ஹூடா செயல்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, February 4, 2022, 20:03 [IST]
Other articles published on Feb 4, 2022
English summary
Deepak hooda all set to make debut in India vs west indies ODI series, Rohit adds him as a finisher
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+