Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே வீரரை தொடர்ந்து புறக்கணிக்கும் ரோகித் சர்மா.. அணிக்குள் ஒருதலைபட்சம்? கொந்தளித்த ரசிகர்கள்!

அகமதாபாத்: இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சிஎஸ்கே வீரரை தொடர்ந்து புறக்கணிப்பதாக ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் ரோகித் சர்மா செய்த புதிய முயற்சி தான் இந்திய அணிக்குள் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார்களா? என்ற சர்ச்சையை கிளப்பியுள்ளது.

எதிர்பாராத மாற்றம்

எதிர்பாராத மாற்றம்

இந்த போட்டியில் இந்திய அணியில் வழக்கமாக ஓப்பனிங் களமிறங்கும் கே.எல்.ராகுலுக்கு பதிலாக திடீரென விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஓப்பனிங் களமிறங்கினார். ராகுல் மிடில் ஆர்டருக்கு அனுப்பப்பட்டார். ரிஷப் பண்ட்-க்கு எச்சரிக்கை கொடுப்பதற்காக இந்த முயற்சியை ரோகித் எடுத்ததாக கூறப்படுகிறது.

என்ன காரணம்

என்ன காரணம்

அதாவது சமீப காலமாக ரிஷப் பண்ட் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். விக்கெட் கீப்பர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்ற தகுதி தான் அவரை காப்பாற்றி வருகிறது. எனவே அவருக்கு பயத்தை கொண்டு வர தான் மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல்.ராகுலை மிடில் ஆர்டருக்கு அனுப்பினார்.

ரசிகர்கள் கொந்தளிப்பு

ரசிகர்கள் கொந்தளிப்பு

இந்நிலையில் சிஎஸ்கே வீரர் ருதுராஜ் புறக்கணிக்கப்படுவதாக ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். துடிப்பான இளம் ஓப்பனிங் வீரர் இருக்கும் போது ரிஷப் பண்ட்-ஐ ஓப்பனிங் அனுப்புவது எப்படி நியாயம். தென்னாப்பிரிக்க தொடரிலும் ருதுராஜ் 3 போட்டிகளிலும் வாய்ப்பு பெறவில்லை. தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடுவதற்கு சூழல் ஏற்பட்ட போதும், பண்ட்-ஐ காப்பாற்ற ரோகித் சர்மா ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Recommended Video

அந்த 3 பேர் முக்கியம்.. பழைய வீரர்களுக்கு மீண்டும் குறிவைக்கும் CSK?
உண்மை காரணம் என்ன

உண்மை காரணம் என்ன

இப்போட்டியில் ருதுராஜ் மற்றும் தவானுக்கு வாய்ப்பு கொடுக்காததற்கான உண்மை காரணம் அவர்களின் உடற்தகுதி தான். கொரோனாவில் இருந்து நேற்று தான் அவர்கள் இருவரும் மீண்டு வந்துள்ளனர். எனவே அவர்கள் முழு உடற்தகுதி பெற சில நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்பதால் ரோகித் இதுபோன்ற முடிவை எடுத்துள்ளார்.

Story first published: Wednesday, February 9, 2022, 18:13 [IST]
Other articles published on Feb 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+