Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“எல்லாம் ஓரளவுக்கு தான்” டிராவிட் மீது கொந்தளிக்கும் ரசிகர்கள்.. ரோகித் தான் காரணம்!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.

குறிப்பாக ரோகித் சர்மா மேற்கொண்ட புதிய ஓப்பனிங் முயற்சி பல்வேறு விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

கிளம்பிய சர்ச்சை

கிளம்பிய சர்ச்சை

இந்திய அணியின் ஓப்பனிங் வீரரான கே.எல்.ராகுலை பயன்படுத்தாமல் திடீரென ரிஷப் பண்ட்-ஐ ஓப்பனிங் களமிறக்கியது. பண்ட்-ன் பேட்டிங் ஃபார்ம் மோசமாக உள்ளதால், அவருக்கு எச்சரிக்கை கொடுப்படுவதற்காக மிடில் ஆர்டரில் கே.எல்.ராகுல் களமிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த வாய்ப்பையும் பண்ட் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவரின் அவசர புத்தியே விக்கெட்டை பறித்துவிட்டது.

கிளம்பிய சர்ச்சை

கிளம்பிய சர்ச்சை

34 பந்துகளை சந்தித்து 18 ரன்களுடன் நிதானமாக விளையாடி வந்தார். ஆனால் அவரின் நிதானத்தை தூண்டும் வகையில் ஒடியன் ஸ்மித் போட்ட பவுன்சர் பந்தில் பண்ட் சிக்கினார். ஆர்வக்கோளாரால் மெதுவாக வந்த பந்தை அடிக்க நினைத்து கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் அவரை அணியை விட்டு நீக்க வேண்டும் என்ற பேச்சு வலுத்து வருகிறது. குறிப்பாக டிராவிட் மீது குற்றச்சாட்டுக்கள் அதிகரித்துள்ளது.

டிராவிட் செய்த தவறு

டிராவிட் செய்த தவறு

டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் இரண்டிலுமே பண்ட்-ன் பேட்டின் ஃபார்ம் மிகவும் மோசமாக இருக்கிறது. இவரின் இடத்திற்கு ருதுராஜ் கெயிக்வாட், இஷான் கிஷான் ஸ்ரேயாஸ் ஐயர், என பலரும் காத்துக்கொண்டுள்ளனர். ஆனால் ராகுல் டிராவிட் ஏதேனும் ஒரு காரணத்தை கூறி பண்ட்-ஐ மீண்டும் மீண்டும் அணிக்குள் சேர்த்து சொதப்பலை எதிர்கொண்டு வருகிறார். இதில் ரோகித் சர்மாவுக்கும் முக்கிய பங்குண்டு எனக் கூறப்படுகிறது.

ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

இதே போன்ற செயலை தான் புஜாரா - ரகானே விஷயத்திலும் டிராவிட் செய்திருந்தார். கடைசி வரை அவர்கள் ஃபார்முக்கு வந்துவிடுவார்கள் என நம்பி, இறுதியில் அவர்கல் ரஞ்சிக்கோப்பைக்கு சென்றுவிட்டனர். எனவே இனியாவது வாய்ப்புக்காக காத்திருக்கும் வீரர்களை கவனியுங்கள், மற்றவர்களை காப்பாற்ற நினைக்காதீர்கள் என டிராவிட்டை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Story first published: Thursday, February 10, 2022, 0:52 [IST]
Other articles published on Feb 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+