Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இவருக்கா வாய்ப்பு தரல நீங்க” 6 போட்டிகளில் அட்டகாச ரெக்கார்ட்.. சூர்யகுமாருக்கு வலுக்கும் ஆதரவு!

அகமதாபாத்: சூர்யகுமார் யாதவின் ரெக்கார்டை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு நாட்களாக ஏன் அவருக்கு சரிவர வாய்ப்பு தரவில்லை என கொந்தளித்துள்ளனர்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன்களை குவித்துள்ளது.

 கைக்கொடுத்த சூர்யகுமார்

கைக்கொடுத்த சூர்யகுமார்

டாப் ஆர்டர் வீரர்கள் சரிந்த போதும், சூர்யகுமார் யாதவ் - கே.எல்.ராகுல் அமைத்த பார்ட்னர்ஷிப் தான் இந்திய அணியை 200 ரன்களை தாண்ட வைத்தது. 4வது விக்கெட்டிற்கு சேர்ந்த இவர்களில் கே.எல்.ராகுல் 49 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 64 ரன்களும் விளாசினர்.

ஒதுக்கப்படும் சூர்யகுமார்

ஒதுக்கப்படும் சூர்யகுமார்

இந்நிலையில் இன்று தூண் போல் நின்று இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்திய சூர்யகுமாருக்காக ஆதரவுக் குரல்கள் வலுத்து வருகின்றன. இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டதில் இருந்து சூர்யகுமார் யாதவ் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்புகளே கிடைக்கவில்லை. ஆனால் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் சூர்யகுமார் யாதவ் திறமையை நிரூபித்து வருகிறார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இதுவரை 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதுவும் 5 - 6வது வீரராக தான் வாய்ப்பு கிடைக்கிறது. எனவே இனி வரும் போட்டிகளில் தொடர்ந்து சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6 போட்டிகளில் சூர்யகுமார் அடித்த ரன்கள்

31*(20)

53(44)

40(37)

39(32)

34*(36)

64(83)

மற்றொரு பிரச்சினை

மற்றொரு பிரச்சினை

இப்படி சிறப்பாக விளையாடக்கூடிய வீரரை இன்னும் கொஞ்சம் டாப் ஆர்டரில் களமிறக்கலாம் என கோரிக்கை வலுத்துள்ளது. அதாவது அதிரடி காட்டும் ரிஷப் பண்ட் 4வது வீரராகவும், சூர்யகுமார் 5வது வீரராகவும் களமிறக்கப்படுகின்றனர். இனி பண்ட்-க்கு முன்னதாக அவரை களமிறக்க முன்னாள் வீரர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

Story first published: Wednesday, February 9, 2022, 18:45 [IST]
Other articles published on Feb 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+