For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னத்த சொல்றது? 110 ரன்கள் எடுக்க முட்டி மோதிய இந்தியா.. அணியை மீட்ட தினேஷ் கார்த்திக்

கொல்கத்தா: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன டி20 தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்படும் என்பதால் இந்த போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. எனினும் எதிர்பார்ப்புக்கு மாறாக, இந்த போட்டி குறைந்த ரன்கள் எடுத்த போட்டியாகவே அமைந்தது.

இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கில் திணறி 109 ரன்கள் எடுத்தது. அடுத்து இந்தியாவும் தடுமாறியே பேட்டிங் செய்தது. தினேஷ் கார்த்திக் பொறுப்பாக ஆடி அணியை வெற்றி பெறச் செய்தார்.

இந்திய வீரர்கள் மாற்றம்

இந்திய வீரர்கள் மாற்றம்

முன்னதாக, இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் உடல் உபாதை காரணமாக அணியில் இருந்து விலகினார். அவருக்கு பதில் உமேஷ் யாதவ் களம் இறங்கினார். கலீல் அஹ்மது மற்றும் க்ருனால் பண்டியா சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகம் ஆகினர். தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பிங் செய்தார். அதே சமயம், ரிஷப் பண்ட் பேட்ஸ்மேன்-ஆக அணியில் இடம் பிடித்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அறிமுக வீரர்கள்

வெஸ்ட் இண்டீஸ் அறிமுக வீரர்கள்

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஓஷேன் தாமஸ், ஃபேபியன் ஆலென் மற்றும் கேரி பியர்ரே அறிமுகம் ஆகினர். டி20 அணிக்கு கீரன் பொல்லார்ட் மற்றும் டேர்ரன் பிராவோ அணிக்கு திரும்பினர். வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியின் கேப்டனாக கார்லோஸ் பிராத்வைட் செயல்பட்டார்.

அணி வீரர்கள் விவரம்

அணி வீரர்கள் விவரம்

இந்திய அணி - ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), க்ருனால் பண்டியா, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரிட் பும்ரா, கலீல் அஹ்மது, உமேஷ் யாதவ்.

வெஸ்ட் இண்டீஸ் அணி - ரோவ்மன் போவெல், டேர்ரன் பிராவோ, ஷாய் ஹோப், ஷிம்ரோன் ஹெட்மையர், தினேஷ் ராம்தின் (விக்கெட் கீப்பர்), கீரன் பொல்லார்ட், கார்லோஸ் பிராத்வைட் (கேப்டன்), கீமோ பால், ஃபேபியன் ஆலென், கேரி பியர்ரே, ஓஷேன் தாமஸ்.

வெஸ்ட் இண்டீஸ் திணறல் பேட்டிங்

வெஸ்ட் இண்டீஸ் திணறல் பேட்டிங்

இந்தியா டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் தினேஷ் ராம்தின், ஷாய் ஹோப் துவக்க வீரர்களாக களம் இறங்கினர். வெஸ்ட் இண்டீஸ் அணி துவக்கம் முதல் விக்கெட் இழப்பால் தவித்தது. 16புதிய வீரர் ஆலென் 27 ரன்கள் எடுத்தது மட்டுமே அந்த அணிக்கு ஆறுதல் அளித்தது. மற்ற வீரர்கள் ஒருவர் கூட 20 ரன்களை தொடவில்லை. 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 109 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் இழந்து தன் இன்னிங்க்ஸ்-ஐ முடித்துக் கொண்டது. குல்தீப் யாதவ் 3, உமேஷ், கலீல், பும்ரா, க்ருனால் பண்டியா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இந்தியாவுக்கு 110 ரன்கள் இலக்கு

இந்தியாவுக்கு 110 ரன்கள் இலக்கு

110 ரன்கள் இலக்கை நோக்கி இந்தியா ஆடத் துவங்கிய இந்தியாவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், ரோஹித் 6, தவான் 3 என இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அடுத்து ரிஷப் பண்ட் பொறுப்பில்லாமல் ஆடி, தூக்கி அடித்து கேட்ச் கொடுத்தார். ராகுல் 16, மனிஷ் 19 ரன்களில் வெளியேறினர். இந்தியா தடுமாறி வந்த நிலையில், தினேஷ் கார்த்திக் பொறுப்பாக ஆடினார். இந்தியா 17.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழந்து 110 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. க்ருனால் பண்டியா 21, தினேஷ் கார்த்திக் 31 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர். பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்த்த இந்த டி20 போட்டி குறைந்த ரன்கள் போட்டியாக மாறியது. இந்தியாவின் பேட்டிங் இன்னும் பலவீனமாகவே இருக்கிறது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது இந்த போட்டி. தினேஷ் கார்த்திக் மீண்டும் ஒரு முறை தன் அனுபவத்தை நிரூபித்துள்ளார்.

Story first published: Sunday, November 4, 2018, 22:44 [IST]
Other articles published on Nov 4, 2018
English summary
India vs West Indies first T20 match Live Score update and results
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+